ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மனதைக் காயப்படுத்தியுள்ளது - டோணி

By Sutha

செளதாம்ப்டன்: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது வருத்தம் தருகிறது, வலியைத் தருகிறது என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.

இந்த முடிவு சரியல்ல என்றும் டோணி கண்டித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜடேஜா இடையே நடந்த இந்த மோதல் விவகாரம் முடிவில்லாமல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உடல் ரீதியாகவும், வாய் வார்த்தைகளாலும் ஜடேஜா தண்டிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அபராதம் விதித்திருப்பது வருத்தம் தருவதாகவும், இது ஏற்க முடியாத ஒன்று என்றும் டோணி கண்டித்துள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் மோதியதற்காக ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதித்து சமீபத்தில் ஐசிசி உத்தரவிட்டது நினைவிருக்கலாம். நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்த மோதல் வெடித்தது.

இதுதொடர்பாக டோணி தெரிவித்துள்ள கருத்து:

என்ன நடந்தது

என்ன நடந்தது

உண்மையில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அம்பயர் லன்ச் என்று அறிவித்ததும் நாங்கள் பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

ஜடேஜாவைத் திட்டிய வீரர்

ஜடேஜாவைத் திட்டிய வீரர்

நான் யாருடைய பெயரையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு வீரர் (ஜேம்ஸ் ஆண்டர்சனைத்தான் குறிப்பிடுகிறார்) ஜடேஜாவை வாய் வார்த்தை மூலம் அவமதித்தார்.

நான் குறுக்கிட்டேன்

நான் குறுக்கிட்டேன்

இதையடுத்து நான் குறுக்கிட்டேன். அந்த சமயத்தில் நாங்கள் மைதானத்தின் கடைசிப் பகுதியை அடைந்து விட்டோம். சரி பிரச்சினை முடிந்தது என்று நினைத்தேன்.

எனக்குப் பின்னால் வந்த ஜடேஜா

எனக்குப் பின்னால் வந்த ஜடேஜா

அப்போது நாங்கள் வீரர்கள் பகுதியை வந்தடைந்தோம். எனக்குப் பின்னால் ஜடேஜா வந்து கொண்டிருந்தார்.

மீண்டும் சில்மிஷம்

மீண்டும் சில்மிஷம்

அப்போது ஏதோ நடந்துள்ளது. ஜடேஜாவிடம் மீண்டும் அந்த வீரர் எதையோ சொல்லியுள்ளார். இதனால் கோபப்பட்ட ஜடேஜா அந்த வீரரிடம் சென்றார்.

ஜடேஜாவைத் தள்ளி விட்டார்

ஜடேஜாவைத் தள்ளி விட்டார்

அப்போது அந்த வீரர் ஜடேஜாவைத் தள்ளி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜடேஜா கீழே விழாமல் சமாளித்து நின்றுள்ளார்.

இதற்கு அபராதமா

இதற்கு அபராதமா

இதை வைத்து ஜடேஜா கிரிக்கெட் விளையாட்டுக்கு அவமரியாதை தரும் வகையில் நடந்து கொண்டதாக முடிவெடுத்து அபராதம் விதித்துள்ளனர்.

ஜடேஜா எதுவுமே பேசலையே

ஜடேஜா எதுவுமே பேசலையே

இந்த சம்பவம் நடந்தபோது ஜடேஜாவிடம் இருந்த பேட் அவரது கையிலேயேதான் இருந்தது. அவர் ஒரு வார்த்தை கூட பதிலுக்குப் பேசவில்லை.

இந்தத் தீர்ப்பு தவறு

இந்தத் தீர்ப்பு தவறு

மேலும் கோபத்தைத் தூண்டும் வகையிலும் கூட ஜடேஜா எதுவும் பேசவில்லை. இப்படி இருக்கையில் எப்படி ஜடேஜாவை குற்றவாளியாக்கி தீர்ப்பு வழங்கலாம். இது தவறானது, வருத்தம் தருகிறது.

அதுக்கு திட்டிரலாமே

அதுக்கு திட்டிரலாமே

நாளை எனது வீரர்கள் யாரேனும், என்ன நடந்தாலும் நமக்குத்தான் அபராதம் விதிக்கப் போகிறார்கள். அதற்குப் பேசாமல் மோதும் வீரரை அவதூறாகப் பேசி விடலாமே என்று என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்.

அப்பீலுக்குக் கூட வழி இல்லை

அப்பீலுக்குக் கூட வழி இல்லை

லெவல் ஒன் விதி மீறலாக ஜடேஜா மீது குற்றம் சாட்டியுள்ளனர். இதில் நாம் அப்பீல் செய்யக் கூட முடியாது. இருந்தாலும் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியமும், எங்களது சட்ட நிபுணர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

சுத்தமாக மகிழ்ச்சி இல்லை

சுத்தமாக மகிழ்ச்சி இல்லை

இந்த தீர்ப்பில் எங்களுக்கு சற்றும் உடன்பாடில்லை. மகிழ்ச்சி இல்லை என்றார் டோணி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
India captain Mahendra Singh Dhoni has criticised the "hurtful" decision to fine Ravindra Jadeja, saying the all-rounder had been the innocent party in an incident involving England's James Anderson. Dhoni said Jadeja had been on the receiving end of "foul langauge" and physical assault and, although the India skipper did not name Anderson on Saturday, it was clear he was referring to the England paceman during a news conference in Southampton ahead of Sunday's third Test match.
Story first published: Sunday, July 27, 2014, 12:34 [IST]
Other articles published on Jul 27, 2014
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more