10 பேரும் டக் அவுட்.. 754 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மா ஸ்கூல்!

10 பேரும் டக் அவுட்.. எதிரணி எடுத்த ரன்கள் 754

மும்பை : மும்பையில் பள்ளிகள் இடையே ஆன கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் ஒரு அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆன பரிதாப நிகழ்வு நடந்தேறி உள்ளது.

எதிரணி 754 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தப் போட்டி டெஸ்ட் போட்டியும் அல்ல. 45 ஓவர் போட்டி. அதில் தான் இத்தனை பெரிய வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது.

எந்த பள்ளிகள்?

எந்த பள்ளிகள்?

மரண அடி வாங்கிய அந்த பள்ளி - சில்ட்ரன் வெல்ஃபேர் பள்ளி. மெகா வெற்றி பெற்ற பள்ளி சுவாமி விவேகானந்த் இன்டெர்நேஷனல் பள்ளி. இந்தப் பள்ளியில் தான் அதிரடி துவக்க வீரர் ரோஹித் சர்மா படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஷீல்டு

ஹாரிஸ் ஷீல்டு

மும்பையில் நடைபெற்ற ஹாரிஸ் ஷீல்டு கிரிக்கெட் தொடரில் மும்பையை சேர்ந்த பள்ளிகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. இந்த தொடரின் முதல் சுற்றில் மிகவும் வலுவான சுவாமி விவேகானந்த் இன்டெர்நேஷனல் பள்ளி, அதிக பயிற்சிகள் இல்லாத சில்ட்ரன் வெல்ஃபேர் பள்ளியை சந்தித்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

முதலில் பந்து வீசிய சில்ட்ரன் வெல்பேர் பள்ளி, படுமோசமாக பந்து வீசி சொதப்பியது. எதிரணி அவர்கள் பந்துவீச்சை கடினமாக கருதவில்லை. வந்த பந்தை எல்லாம் பவுண்டரிக்கு விரட்டினர். சுவாமி விவேகானந்த் பள்ளியை சேர்ந்த மீட் மாயேகர் 134 பந்துகளில் 338 ரன்கள் குவித்தார். 56 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து மிரட்டி இருந்தார். கிருஷ்ணா பார்த்தே 95, இஷான் 67 ரன்கள் குவித்தனர்.

39 ஓவர்கள்

39 ஓவர்கள்

45 ஓவர் கொண்ட இந்தப் போட்டியில் சில்ட்ரன் வெல்பேர் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 45 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. 6 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தது. இதையடுத்து சுவாமி விவேகானந்த் அணியின் பேட்டிங் 39 ஓவர்களுடன் முடிந்தது.

ஓவர் பெனால்டி

ஓவர் பெனால்டி

ஓவர் பெனால்டியாக 156 ரன்கள் வழங்கப்பட்டது. 39 ஓவர்களில் 6௦5 ரன்கள் குவித்த அந்த அணி, கூடுதல் ரன்களையும் சேர்த்து 4 விக்கெட்கள் இழப்பிற்கு 761 ரன்கள் குவித்தது. அடுத்து மவுன்ட் எவரெஸ்ட் அளவுக்கான இலக்கை நோக்கி ஆடிய சில்ட்ரன் வெல்பேர் அணி ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் திணறியது. 6 ஓவர்களில் அனைத்து பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆனார்கள்.

இமாலய வெற்றி

இமாலய வெற்றி

சுவாமி விவேகானந்த் அணி 6 வைடுகள், ஒரு லெக் பை கொடுத்து 7 ரன்கள் விட்டுக் கொடுத்தது. போட்டி முடிவில் 754 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது அந்த அணி. இத்தனைக்கும் அந்த அணியின் கேப்டன் மற்றும் இரண்டு முக்கிய வீரர்கள் மும்பை அண்டர் 16 அணிக்கான பயிற்சியில் ஈடுபட சென்றுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mumbai school team failed creepily as all the batsmen gone for duck out.
Story first published: Thursday, November 21, 2019, 19:38 [IST]
Other articles published on Nov 21, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X