For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியில் இனி இடம் இல்லை..! பாக். வீரருக்கு மாற்றாக களம் இறங்கும் இந்திய வீரர்

லண்டன்: இந்திய அணியில் இடம் இல்லாததால், பாக். வீரருக்கு மாற்றாக இங்கிலாந்து உள்ளூர் அணியில் இடம்பிடித்திருக்கிறார் முரளி விஜய்.

இந்திய அணியில் துவக்க வீரராக இருந்தவர் முரளி விஜய். தமிழக வீரரான அவர் ஆரம்ப காலங்களில் சிறப்பாக ஆடியவர். பின்னர் காயம், அதனை தொடர்ந்து ஏற்பட்ட ஆட்டத்திறன் குறைபாடு ஆகியவற்றால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறினார்.

தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது டிஎன்பிஎல் தொடரில் அசத்தி அற்புதமான பார்முக்கு வந்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் முரளி விஜய் இடம்பெற வில்லை.

கவுன்டி தொடர்

கவுன்டி தொடர்

இந்நிலையில், நடப்பு சீசனில் 3 போட்டிகளுக்காக சோமர்செட் கவுன்டி அணியில் விளையாடுகிறார். அந்த அணியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலிக்கு பதிலாக முரளி விஜய் ஒப்பந்தமாகி உள்ளார்.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

இதுகுறித்து முரளி விஜய் கூறியதாவது: சோமர்செட் மிகச் சிறந்த கவுன்ட்டி கிரிக்கெட் அணி. அதில் இடம்பிடித்துள்ளது மகிழ்ச்சி. இந்த போட்டிகளில் நிச்சயம் சாதிக்க முயற்சிப்பேன். அணியின் வெற்றிக்கு முழு பங்களிப்பை அளிப்பேன் என்றார்.

61 டெஸ்ட் போட்டிகள்

61 டெஸ்ட் போட்டிகள்

முரளி விஜய் இந்தியாவுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் 38.28 என்ற சராசரியில் 3, 982 ரன்கள் குவித்தவர். 131 முதல் வகுப்பு போட்டிகளில் 42.79 சராசரியுடன் 9,116 ரன்கள் எடுத்து அசத்தியவர்.

சராசரி 64.60

சராசரி 64.60

அவரது அதிகபட்ச ஸ்கோர் 266 ரன்கள். கடந்த சீசனில் எசெக்ஸ் அணிக்காக 3 கவுன்டி போட்டிகளில் விளையாடிய அவர் 64.60 என்ற சராசரியுடன் 320 ரன்கள் குவித்து அனைவரையும் அவர் ஆச்சரியத்தில ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 26, 2019, 20:07 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
Murali vijay will play for somerset county cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X