For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருந்தாத வங்கதேச வீரர்கள்.. முதன்முறை அல்ல.. அப்போதே "பொளேர்" விட்ட தோனி

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தங்களது செயல்பாடுகளால் தொடர்ந்து அவப் பெயர்களை சம்பாதித்து வருகின்றனர். ஹீரோயிசம் என்று நினைத்து காமெடி செய்து கொண்டிருக்கின்றனர்.

வங்கதேச கிரிக்கெட் வீரர்களிடம் இல்லாத திறமையே கிடையாது. அவர்களது ஒரே மைனஸ் "வாய்" தான். போட்டியில் ஜெயிப்பதற்கு முன்பே கொண்டாடுவது, ஜெயிப்பது போல் இருந்தாலே எதிரணி வீரர்களை வம்பிழுப்பது, வார்த்தை மோதலில் ஈடுபடுவது, நாகினி டான்ஸ் போடுவது என்று தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில் ஜெயிக்க வேண்டிய மேட்சை தோற்றுவிட்டு, தேம்பி தேம்பி அழுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

மகளிர் அணியின் முரட்டுத்தனமான ஜிம் பயிற்சி... பிசிசிஐ வெளியிட்ட வீடியோ... விமர்சனங்களுக்கு பதிலடி! மகளிர் அணியின் முரட்டுத்தனமான ஜிம் பயிற்சி... பிசிசிஐ வெளியிட்ட வீடியோ... விமர்சனங்களுக்கு பதிலடி!

எத்தனையோ போட்டிகளில், இது போன்று அவர்கள் வரம்பு மீறி செயல்பட்டிருக்கின்றனர். ஆனாலும், அவர்கள் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போதும் அப்படி ஒரு சிக்கலில் தான் வங்கதேச அணி சிக்கியிருக்கிறது. சம்பவம் செய்திருப்பவர் 2வது ஒருநாள் போட்டியின் 'ஹீரோ' முஷ்பிகுர் ரஹீம்.

சூப்பர் வெற்றி

சூப்பர் வெற்றி

இலங்கையும், வங்கதேசமும் இப்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றன. இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 48.1 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் 125 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு மழையின் காரணமாக 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

கீழே தள்ளு

கீழே தள்ளு

இந்த போட்டியில், இலங்கை அணி பேட்டிங் செய்த போது 11வது ஓவரை வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் நின்ற குணதிலகா, பந்தை மெஹிதி ஹசனிடம் மெதுவாக தட்டிவிட, மறுமுனையில் நின்றிருந்த பதும் நிஷங்கா, சிங்கிள் எடுக்க கிறீஸை விட்டு வெளியேறினார். பிறகு, பவுலர் பந்தை தடுத்து நிறுத்த பின்வாங்கிவிட்டார். அப்போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர், பவுலர் மெஹிதியிடம், " உன் வழியில் குறுக்கே வந்தால், பிடித்து அவனை கீழே தள்ளிவிடு' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இவை ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாக, அவரது அன்றைய தின 'ஹீரோயிக்' சதத்தை தாண்டி, ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரன் அவுட் திட்டம்

ரன் அவுட் திட்டம்

இதே போன்று, 2015ம் ஆண்டு வங்கதேசம் சென்றிருந்த இந்திய அணியை அந்த வீரர்கள் வம்பிழுத்தனர். அப்போது நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில், வங்கதேச பவுலர் முஸ்தாபிசூர் பந்து வீசி விட்டு, பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடி வரும் போதும், அவர்களை தடுக்கும் விதமாக நடுவில் நின்று கொண்டு தொந்தரவு செய்தார். இதன் மூலம், பேட்ஸ்மேன்களை ரன் அவுட் ஆக்குவது என்பது அவர்களது வியூகம். ரோஹித் ஷர்மா ரன் எடுக்க ஓடி வரும் போது, முஸ்தாபிசூர் வந்து நடுவில் நிற்க, கடுப்பான ரோஹித், விரலை நீட்டி அங்கேயே அவரை கண்டித்தார்.

நிலைதடுமாறிய பவுலர்

நிலைதடுமாறிய பவுலர்

ஆனால், அப்போதும் அடங்காத முஸ்தாபிசூர் மீண்டும் பேட்ஸ்மேன் ரன் ஓடும் போது வந்து குறுக்கே நின்றார். இம்முறை ரன் எடுக்கவந்தது கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஏற்கனவே வங்கதேச வீரர்கள் அடித்த கூத்தை கவனித்த 'கூல்' தோனி, இவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே திருப்பி கொடுக்க வேண்டும் என்று, குறுக்கே வந்த முஸ்தாபிசூரை இடித்து கீழே தள்ளினார். தோனியின், ஹேண்ட் பவர், பைசெப்ஸ் பவருக்கு இடித்தால் என்ன ஆவது? துளி கூட பேலன்ஸ் செய்ய முடியாமல் முஸ்தாபிசூர் கீழே விழுந்தார்.

திருந்தாத வங்கதேசம்

திருந்தாத வங்கதேசம்

எனினும், வங்கதேச வீரர்கள் திருந்துவதாய் இல்லை. 2018ல் இலங்கையில் நடந்த ஆசிய கோப்பைத் தொடரில், இலங்கை மேட்சிங் போது, அந்நாட்டு வீரர்களுடன் களத்திலேயே சண்டை போட்டது, விளையாட முடியாது என்று கேப்டன் ஷகிப் அல் ஹசன், தனது பிளேயர்களை திரும்ப அழைத்தது, பிறகு இலங்கையை வீழ்த்திவிட்டு 'நாகினி' பாம்பு தாண்டி போட்டது, இந்தியாவுடனான இறுதிப் போட்டியிலும் வெற்றிப் பெற்று நாகினி டான்ஸ் போடலாம் என்று நினைத்திருந்து, தினேஷ் கார்த்திக்கின் கடைசி பந்து சிக்ஸால் செமத்தியாக வாங்கிக் கட்டி, வாயை புண்ணாக்கிக் கொண்டது போன்ற பல காமெடி ஸ்டாக்குள் உள்ளன.

இப்போதும், மீண்டும் அப்படியொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது அந்த அணி. அதுவும் அணியின் சீனியர் வீரர் முஷ்பிகுர், எதிரணி வீரரை தள்ளிவிடு என்கிறார்'.. ம்ஹூம் வெளங்கிடும்!.

Story first published: Thursday, May 27, 2021, 20:10 [IST]
Other articles published on May 27, 2021
English summary
Mushfiqur Rahim Audio obstruct sl batsman - முஷ்பிகுர் ரஹீம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X