For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னால முடியல... ரூம்ல அடச்சி வச்சிட்டாங்க.. பயோ பபுள் வாழ்கையால் புலம்பும் வங்கதேச வீரர்

டெல்லி: தொடர் குவாரண்டைன் வாழ்கையால் வெறுப்படைந்துள்ளார் வங்கதேச வீரர் முஸ்திவிசூர் ரஹ்மான்.

உலகில் அனைத்து கிரிக்கெட் தொடர்களும் பயோபபுள் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. வீரர்கள் அடிக்கடி தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர்.

 முன்னாள் வீரர்.. தோனியின் ஆருயிர் நண்பன்.. ஆர்.பி.சிங் தந்தை உயிரை பறித்த கொரோனா! முன்னாள் வீரர்.. தோனியின் ஆருயிர் நண்பன்.. ஆர்.பி.சிங் தந்தை உயிரை பறித்த கொரோனா!

தொடர்ந்து இதே போன்று இருப்பதால் வெளி உலகை பார்க்க முடியாமல் தவிப்பதாக கிரிக்கெட் வீரர்கள் புலம்பி வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்போது முஸ்திவிசூர் ரஹ்மானும் இணைந்துள்ளார்.

இரு வீரர்கள்

இரு வீரர்கள்

வங்கதேசத்தை சேர்ந்த முஸ்திவிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார். தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரஹ்மான் மற்றும் அவருடன் சகிப் அல் ஹசன் தனி விமானம் மூலம் தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குவாரண்டன்

குவாரண்டன்

எனினும் அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை. நாட்டில் காலடி எடுத்து வைத்தவுடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையே வரும் மே 23ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதனால் அவர்கள் இருவரும் குவாரண்டைனுக்கு பிறகு நேரடியாக வங்கதேச அணியுடன் இணையவுள்ளனர்.

சிரமம்

சிரமம்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய முஸ்திவிசூர், தொடர்ந்து நீண்ட நாட்களாக பயோ பபுளில் இருப்பது மிக சோர்வாக உள்ளது. ஹோட்டல் அறையைவிட்டல் மைதானம், மைதானத்தை விட்டால் ஹோட்டல் அறை என எத்தனை நாட்களுக்கு இதை மட்டுமே செய்வது. நாளுக்கு நாள் கஷ்டமாக உள்ளது.

ஒரே விதிதான்

ஒரே விதிதான்

சர்வதேச போட்டியானலும் சரி, ஐபிஎல் தொடரும் சரி கொரோனா வழிமுறைகள் அனைத்திற்கும் ஒன்றாக தான் உள்ளது. இது அனைத்து வீரர்களுக்கும் சிரமமாக உள்ளது. எனினும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. முன்னர் இந்தியாவில் பபுளில் இருந்தேன், தற்போது வங்கதேசத்தில் உள்ளேன். மற்றவர்களை போல சகஜமாக பயணிக்க முடியவில்லை.

பிடிக்கவில்லை

பிடிக்கவில்லை

ஐபிஎல்-ல் ஒரு அணியை சேர்ந்த வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், நாங்கள் அனைவரும் 5 - 6 நாட்களுக்கு ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டோம். அதன் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானம் மூலம் நாடு திரும்பினோம் என முஸ்திவிசூர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, May 12, 2021, 15:09 [IST]
Other articles published on May 12, 2021
English summary
Mustafizur Rahman shares the Experiece of quanrentine days
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X