வெளியே கொஞ்சம் காயம்... உள்ளே நிறைய வலி... விடைபெறுகிறார் சாதனை நாயகன் நெஹ்ரா!

Posted By:

டெல்லி: இந்தியாவின் முக்கிய வேகப்பந்து பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஒய்வு பெறுகிறார். இன்று நியூசிலாந்துவுடன் நடக்க இருக்கும் டி-20 போட்டியே அவர் பங்குபெறும் கடைசி சர்வதேச போட்டியாகும்.

இந்தியாவின் மிக முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறார். இந்தியாவிலேயே மிக அதிக கேப்டன்களுக்கு கீழ் விளையாடியது இவர்தான். அவர் சொந்த மண்ணில் இந்த கடைசி ஆட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1999ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 18 வருடங்கள் கழித்து இன்றோடு முடிவடைகிறது.

 நெஹ்ரா விளையாடும் கடைசி ஐசிசி ஆட்டம்

நெஹ்ரா விளையாடும் கடைசி ஐசிசி ஆட்டம்

இன்று நியூசிலாந்துவுடன் டெல்லியில் நடக்க இருக்கும் டி-20 போட்டியே இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் இருந்து அவர் அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார். இந்த கடைசி போட்டியில் அவர் இந்திய கேப்டன் கோஹ்லியின் தலைமையின் கீழ் அவரது சொந்த மண்ணான டெல்லியில் விளையாடுகிறார். இது குறித்து ஏற்கனவே அவர் மிகவும் உணர்ச்சிகரமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 18 வருடம் விளையாடிய தனித்துவம்

18 வருடம் விளையாடிய தனித்துவம்

இவர் தனது முதல் முதலாக இலங்கைக்கு எதிராக கொழும்பில் 1999 பிப்ரவரி 24 நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். சரியாக 18 வருடங்கள் முடிந்த பின் தற்போது சர்வதேச போட்டிகளால் இருந்து ஒய்வு பெறுகிறார். மற்ற பவுலர்கள் போல் இல்லாமல் இவர் மிகவும் தன்னித்துவமானவர். வேகப்பந்து வீச்சாளருக்கான எந்த அடையாளமும் இல்லாதவர். பார்ப்பதற்கு தூங்கிக் கொண்டு இருப்பதை போல் பாவனை செய்துவிட்டு 140 கிமீ வேகத்தில் பந்து எறியக்கூடிய திறமை கொண்டவர். அவருடன் விளையாடியவர்கள் எல்லாம் சென்றுவிட்ட பின் தற்போது தனியாக ஒய்வு பெற இருக்கிறார்.

 காயங்களின் நாயகன்

காயங்களின் நாயகன்

இந்த 18 வருட அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய அழகாக சம்பவங்கள் நடந்து இருக்கிறது. 2011ல் நடந்த உலகக் கோப்பை அணியில் அவர் இருந்ததை குறிப்பிடலாம். அதே சமயத்தில் அவர் நிறைய காயங்களையும் சுமந்து இருக்கிறார். உடல் முழுக்க ஏற்பட்ட காயங்கள் காரணமாக இதுவரை இவர் 12க்கும் அதிகமான சர்ஜரிகளை செய்து இருக்கிறார். 38 வயதில் களத்தில் இறங்க இருக்கும் இவருக்கு உடலில் மட்டும் இல்லை தொடர் புறக்கணிப்புகள் காரணமாக மனதிலும் நிறைய காயங்கள் இருக்கின்றது. தொடர்ச்சியாக ஒருவருடம் முழுக்க இவரால் அணியில் தொடர முடிந்ததே இல்லை.

 நெஹ்ராவின் வேற லெவல் அனுபவம்

நெஹ்ராவின் வேற லெவல் அனுபவம்

டெல்லி டி-20 போட்டியில் மைதானத்தில் விளையாடும் வீரர்களில் இவர் மட்டுமே 90 களில் அறிமுகம் ஆன பிளேயர் ஆவார். மற்ற அனைத்து பிளேயர்களும் 2000 திற்கு பின் இந்திய அணிக்கு வந்தவர்கள் ஆவர். கோஹ்லி சிறிய பிளேயராக பள்ளிகளில் விளையாடிய பொது அதில் ஒரு போட்டிக்கு இவர் சிறப்பு விருந்தினராக கூட சென்று இருக்கிறார். இப்போது அதே கோஹ்லியின் கீழ் விளையாட இருக்கிறார். இந்திய அணியில் தற்போது விளையாடும் பிளேயர்களில் அதிக கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய பிளேயர் நெஹ்ரா மட்டுமே ஆவார். இவர் முதலில் அசாருதீன் தலைமையின் கீழ் அறிமுகம் ஆனார். அதன்பின் கங்குலி, டிராவிட், அணில் கும்ப்ளே, கம்பிர் ஆகியோர் தலைமையில் அணியில் இருந்திருக்கிறார்.

 முதல் போட்டியும் கடைசி போட்டியும்

முதல் போட்டியும் கடைசி போட்டியும்

டெல்லியில் நடக்க இருக்கும் இந்த போட்டி நெஹ்ராவுக்கு கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம். ஆனால் அன்று நடக்கும் இதே போட்டிதான் மற்ற இரண்டு வீரர்களுக்கு முதல் சர்வதேச போட்டியாகும். இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இந்த போட்டிதான் முதல் ஐசிசி போட்டியாகும். மேலும் நெஹ்ரா தன்னுடைய முதல் தர போட்டியை தொடங்கியது டெல்லி மைதானத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே அதே இடத்தில் கடைசியாக விடைபெற இருக்கிறார்.

 அணியில் இடம்பிடிப்பாரா

அணியில் இடம்பிடிப்பாரா

இந்த நிலையில் இவர் நேற்று நடந்த பயிற்சியில் ஈடுபடாமல் 15 நிமிடத்தில் அனைவரிடமும் பேசிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெஹ்ராவின் கடைசி மேட்ச்சில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் பும்ரா, புவனேஷ்குமாரை ஒய்வு எடுக்க சொல்லும் முடிவை கோஹ்லி எடுப்பாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. ''கிரிக்கேட் உலகில் என் உடலில் காயங்கள் ஏற்படவில்லை. காயங்களில் தான் என் உடலே இருக்கிறது'' என்று கஷ்டங்களை துஷ்டமாக கருதிய வீரர் இன்று விளையாடுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Wednesday, November 1, 2017, 11:47 [IST]
Other articles published on Nov 1, 2017
Please Wait while comments are loading...