For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் கேப்டென்சி எப்படி இருக்கும் தெரியுமா?.. புதிய வியூகம் வகுக்கும் ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar

டெல்லி: தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லிக்கு பிசிசிஐ ஒருமாதம் ஓய்வு அளித்து இருக்கிறது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தற்போது ரோஹித் தன்னுடைய கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்று விளக்கி இருக்கிறார். மேலும் இலங்கைக்கு எதிரான தொடருக்கு எதிராக என்ன மாதிரியான திட்டங்களை வகுக்க இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு உள்ளது. கோஹ்லி சிறந்தவரா, ரோஹித் சிறந்தவரா என்ற விவாதம் நடக்கிறது.

கோஹ்லி ஓய்வு

கோஹ்லி ஓய்வு

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கோஹ்லி தொடர்ந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். இந்த நிலையில் கோஹ்லி 1 மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லிக்கு ஒய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என முடிவாகியுள்ளது. இனி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜனவரியில் நடக்க இருக்கும் போட்டியில் விளையாடவே கோஹ்லி அணிக்கு திரும்புவார்.

ரோஹித்தின் திட்டம்

ரோஹித்தின் திட்டம்

இந்த நிலையில் புதிய கேப்டன் ரோஹித் தன்னுடைய திட்டங்கள் குறித்து விளக்கி உள்ளார். அதில் ''நான் எந்த விஷயத்தையும் சிக்கல் ஆக்கிக்கொள்ள விரும்பவில்லை. மிகவும் எளிமையாக விளையாட விரும்புகிறேன். இது ஒரு விளையாட்டு. அதை மனதில் வைத்து செயல்படுவேன். பழைய ரோஹித்தாக இருக்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார்.

மாறிவிட்டேன்

மாறிவிட்டேன்

மேலும் தனக்கு கிடைத்த கேப்டன்ஷிப் வாய்ப்பு குறித்தும் கூறியுள்ளார். அதில் ''நான் முதலில் டெஸ்ட் போட்டிகளுக்குத்தான் தயார் ஆனேன். ஆனால் தற்போது ஒருநாள் போட்டியில் முக்கிய பிளேயர் ஆகி உள்ளேன். கண்டிப்பாக கேப்டன் ஆவது பற்றி நினைக்கவில்லை. எனக்கு முன் நிறைய சவால்கள் இருக்கிறது. அதேபோல் என் கடந்த காலம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது'' என்று நம்பிக்கையாக பேசினார்.

பெஸ்ட் யார்

ரோஹித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று விதமான ஐபிஎல் டைட்டில்களை வென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது 'கோஹ்லி பெருசா, ரோஹித் பெருசா' என்ற விவாதம் உருவாகி இருக்கிறது. அஜித்- விஜய் பேன்ஸ் சண்டை போல நேற்று டிவிட்டர் முழுக்க இந்த தலைப்பு டிரெண்ட் ஆனது. அதி தீவிர கோஹ்லி ரசிகர் இப்படி எழுதியுள்ளார், அதில் ''ரோஹித் நான்தான் கேப்டன் என்றதும், கோஹ்லி அவரிடம் வந்து ஆமாம் நீங்கதான் கேப்டன் ஆனா டாஸ் போட மட்டும் தான்'' என்று சொல்வது போல கலாய்த்துள்ளார்.

Story first published: Tuesday, November 28, 2017, 12:12 [IST]
Other articles published on Nov 28, 2017
English summary
The indian squad for one day series against Sri Lanka has been announced. Kohli will not lead the team, since he has rested from the match. Rohith Sharma will lead the one day series against Sri Lanka. New Indian captain Rohith explains about his captaincy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X