For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“மிக வெட்கக் கேடான செயல்”.. கேன் வில்லியம்சனுக்கு திடீர் கொரோனா.. பயிற்சியாளர் கடும் அதிருப்தி!

இங்கிலாந்து: நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சீனியர்கள் ரெஸ்ட் ஏன்? நாட்டை விட ஐபிஎல்தான் முக்கியமா? உலக சாதனையை நழுவ விட்ட இந்தியா!சீனியர்கள் ரெஸ்ட் ஏன்? நாட்டை விட ஐபிஎல்தான் முக்கியமா? உலக சாதனையை நழுவ விட்ட இந்தியா!

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

நியூசிலாந்து அணி அட்டகாசமான கம்பேக் கொடுத்த போதும், முதல் டெஸ்டில் வெற்றியை பெற முடியவில்லை. எனவே அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் தான் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு பின்னடைவு

நியூசிலாந்துக்கு பின்னடைவு

இன்று அவருக்கு அறிகுறிகள் தென்பட்டதால் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார். இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக டாம் லாதம் கேப்டனாக செயல்படவுள்ளார்.

திடீர் பிரச்சினை

திடீர் பிரச்சினை

இங்கிலாந்து டூரில் நியூசிலாந்து அணியில் 4வது வீரராக கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தான் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தின் போதே 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது வில்லியம்சன் பாதித்துள்ளதால், பரிசோதனையில் எதாவது தவறு இருக்குமோ என நியூசிலாந்து அணிக்குள்ளேயே குழப்பம் உண்டாகியுள்ளது.

அசிங்கமான செயல்

அசிங்கமான செயல்

இதுகுறித்து பேசியுள்ள பயிற்சியாளர் கேரி ஸ்டெட், ஒரு முக்கியமான போட்டியில் இருந்து வில்லியம்சனை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது மிகவும் வெட்கக்கேடான செயல். இதனால் அவர் எவ்வளவு மன உளைச்சலில் இருப்பார் என எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. வருத்தமாக இருக்கிறது என அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 10, 2022, 13:37 [IST]
Other articles published on Jun 10, 2022
English summary
Newzealand Captain Kane williamson Tested Postive for Covid 19
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X