இலங்கையை பங்கம் செய்த நியூசி..! முன்ரோ, குப்தில் அரைசதம்..! 10 விக். வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி

World cup 2019 SL VS NZ | 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து

கார்டிப்:உலக கோப்பை தொடரில் இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றியை பெற்றிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரின் 3வது லீக் போட்டியில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. கார்டிப்பிலுள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் இப் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். தொடர்ந்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திரிமன்னேவும், கேப்டன் கருணரத்னேவும் களமிறங்கினர்.

அடுத்தடுத்து அவுட்

அடுத்தடுத்து அவுட்

திரிமன்னே 4 ரன்களில் மேட் ஹென்ட்ரி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய குசல் பெரேரா 29 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து களமிங்கிய கமெண்டிஸ் டக் அவுட்டானார்.

136 ரன்களில் சுருண்டது

136 ரன்களில் சுருண்டது

தனஞ்ஜெய டி சில்வா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமறிங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து, ரசிகர்களை ஏமாற்றினர். இறுதியில் 29.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றியும், பெர்குசனும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெற்றிக்கான வாய்ப்பு

வெற்றிக்கான வாய்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 136 ரன்களுக்குள் இலங்கை அணி சுருண்டதால் போட்டியின் சுவாரசியம் வெகுவாக குறைந்தது. 137 ரன்கள் என்பது எளிய இலக்கு தான் என்பதால் நியூசிலாந்துக்கு தான் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தன.

இலங்கை பந்துவீச்சு

இலங்கை பந்துவீச்சு

அதன்படி, எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான முன்ரோவும், குப்திலும் வந்தனர். குறுகிய காலத்துக்குள் விக்கெட்டுகளை கைப்பற்றினால் தான் வெற்றி என்பதை உணர்ந்த இலங்கை அணியினர் பந்துவீசினர்.

சிக்சர்கள், பவுண்டரிகள்

சிக்சர்கள், பவுண்டரிகள்

ஆனால், மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருந்த குப்திலும், முன்ரோவும் இலங்கை பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டனர். கிடைத்த பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் அனுப்பி தள்ளினர்.

அடுத்தடுத்து அரைசதம்

அடுத்தடுத்து அரைசதம்

சீரான இடைவெளியில் இருவரும் பந்துகளை அடித்து ஆடி, ரன்களை குவித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர். முடிவில் 16.1 ஓவரில் 137 ரன்களை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து.

ஹென்றி ஆட்டநாயகன்

ஹென்றி ஆட்டநாயகன்

தொடக்கம் முதல் இறுதி வரை முன்ரோவும், குப்திலும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்ரோ 58 ரன்களும், குப்தில் 73 ரன்களும் எடுத்து அசத்தினர். ஆட்ட நாயகன் விருது நியூசி. வீரர் ஹென்றிக்கு வழங்கப்பட்டது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Newzealand crushed srilanka and won by 10 wickets.
Story first published: Saturday, June 1, 2019, 20:23 [IST]
Other articles published on Jun 1, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X