For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த வருஷம் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரா.. சான்ஸே இல்லை.. பிசிசிஐ

டெல்லி: 2016ம் ஆண்டில் இந்தியா பாகிஸ்தான் இடையே எந்த கிரி்க்கெட் தொடரும் திட்டமிடப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இந்தத் தகவலை செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் இரு நாடுகளுக்கும் இடையே எந்தத் தொடரும் நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்துக்கான போட்டிகள் அட்டவணையில் இந்தியா- பாகிஸ்தான் தொடர் இடம் பெறவில்லை என்று தெரிவித்த அவர், கடந்த வருடம் திட்டமிட்டோம், ஆனால் நடக்கவில்லை. இந்த வருடம் திட்டமே இல்லை என்றார்.

2015ல் திட்டமிட்டோம்

2015ல் திட்டமிட்டோம்

இதுகுறித்து அனுராக் தாக்கூர் கூறுகையில், கடந்த வருடம் இந்தியா - பாகிஸ்தான் தொடருக்குத் திட்டமிட்டோம். ஆனால் நடக்கவில்லை. இந்த வருடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை.

ஆசியாக் கோப்பைப் போட்டி

ஆசியாக் கோப்பைப் போட்டி

இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த வருடம் நடைபெறும் ஆசியாக் கோப்பைப் போட்டி மற்றும் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் சந்திக்கவுள்ளன. அது பன்னாட்டு தொடராகும். இரு தரப்புத் தொடர் அல்ல என்றார் அவர்.

பாகிஸ்தானின் நம்பிக்கை

பாகிஸ்தானின் நம்பிக்கை

அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையே இந்த வருடம் நிச்சயம் இரு தரப்பு தொடர் நடைபெறும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டு வருகிறது. இங்கிலாந்தில் இந்தத் தொடர் நடைபெறலாம் என்றும் அது கூறி வருகிறது.

இரு நாடுகளின் நிலவரம்

இரு நாடுகளின் நிலவரம்

இந்தியா பாகிஸ்தான் தொடருக்கு மத்திய அரசு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் இந்தியாவிலும் அதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் வாரியம் இந்தியாவுடன் மோத ஆர்வம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 9, 2020, 11:03 [IST]
Other articles published on Dec 9, 2020
English summary
The Board of Control for Cricket in India's (BCCI) secretary Anurag Thakur today ruled out the possibility of an India-Pakistan bilateral series stating that no such series is scheduled in Futures Tours & Programme (FTP) calender.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X