For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது.. ஐபிஎல் துவக்க விழாவை ரத்து பண்ணிட்டாங்களா? சிறப்பான, தரமான காரியம்!!

Recommended Video

IPL 2019 : ஐபிஎல் துவக்க விழாவை ரத்து பண்ணிட்டாங்க... ஏன் தெரியுமா?- வீடியோ

சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 23 அன்று பெரிதாக துவக்க விழா நடைபெறும் என சில மாதங்கள் முன்பு செய்திகள் வெளியானது.

அதன் பின் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில், ஐபிஎல் தொடரின் துவக்க விழாவை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்தது.

இவங்க தான் அந்த 11 பேரா...? யெல்லோ ஆர்மியை முதல் போட்டியில் எதிர்கொள்ளும் பெங்களூரு உத்தேச அணி இவங்க தான் அந்த 11 பேரா...? யெல்லோ ஆர்மியை முதல் போட்டியில் எதிர்கொள்ளும் பெங்களூரு உத்தேச அணி

குடும்பத்தினருக்கு..

குடும்பத்தினருக்கு..

மேலும், ஐபிஎல் துவக்க விழாவிற்காக செலவு செய்ய ஒதுக்கி வைத்திருந்த தொகையை பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கமாக நடைபெறும் பிரம்மாண்ட ஐபிஎல் துவக்க விழாவை இந்த முறை நாம் காண முடியாது.

15 கோடி

15 கோடி

ஏற்கனவே, பிசிசிஐ ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்திருந்தது. தற்போது ஐபிஎல் துவக்க விழாவிற்கு 15 கோடி வரை செலவு செய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த தொகையும் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

இது தேவையா?

இது தேவையா?

முந்தைய ஐபிஎல் தொடர் துவக்க விழாக்கள் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலர் பணத்தை வீணாக்கி நடத்தப்படும் இத்தனை பிரம்மாண்ட விழா தேவையா என கேள்வி எழுப்பி வந்தனர்.

நடைமுறையாக மாறுமா?

நடைமுறையாக மாறுமா?

இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் துவக்க விழா ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு, அந்தத் தொகை ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்பட உள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும் பிசிசிஐ இதே நடைமுறையை பின்பற்றுமா?

Story first published: Saturday, March 23, 2019, 14:56 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
No Opening ceremony for IPL 2019. Instead the IPL 2019 season starts with CSK vs RCB match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X