For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெவிலியனுக்கு மட்டுமல்ல… மொத்த ஸ்டேடியத்துக்கும் தோனி பேர் தான் வைக்கணும்… வைக்கணும்

ராஞ்சி:ராஞ்சி கிரிக்கெட் மைதானத்திற்கே தோனியின் பெயரையே வைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி, தற்போது அந்த மாநிலத்தின் அடையாளமாக திகழ்கிறார். இந்திய அணியின் கேப்டனாக அவர் இருந்த போது தொடர்ந்து கோப்பைகளை வென்று அணியின் தரத்தை உயர்த்தி, நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அனுபவத்தின் மூலம் கடினமாக நேரங்களில் அசத்தி வருகிறார். இந்நிலையில் தோனியின் சாதனைகளை போற்றும் வகையில் தற்போது ஜார்கண்ட் கிரிக்கெட் மைதானத்தின் தெற்கு பெவிலியனுக்கு தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆமாப்பா... சச்சின், லாராவை விட பெஸ்ட் பிளேயர் கோலி தான்... முன்னாள் கேப்டன் ஓபன் ஸ்டேட்மெண்ட்ஆமாப்பா... சச்சின், லாராவை விட பெஸ்ட் பிளேயர் கோலி தான்... முன்னாள் கேப்டன் ஓபன் ஸ்டேட்மெண்ட்

தோனியின் பெயர்

தோனியின் பெயர்

ராஞ்சி மைதானத்தில் நேற்று போட்டி நடந்த போது இதுகுறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டடது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது வர்ணனையாளர்களாக சஞ்சய் மஞ்ரேகர் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் இருந்தனர்.

உரையாடல்கள்

உரையாடல்கள்

அவர்கள் இருவருரின் உரையாடல்கள் குறித்து தோனி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். அதில், சின்ன நகரத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த இந்திய அணியை அவர் வழிநடத்தி இருக்கிறார்.

பெவிலியனுக்கு தோனி பெயர்

பெவிலியனுக்கு தோனி பெயர்

சச்சின், டிராவிட் என பலரும் அவர் தலைமையில் விளையாடி உள்ளனர். அவர் பெயரில் பெவிலியன் உள்ளது. அப்படி என்றால் மைதானத்தின் பெயர் என்ன? என்று கவாஸ்கரிடம் சஞ்சய் மஞ்ரேகர் கேள்வி எழுப்பினார்.

மற்றொரு சாதனையாளர்

மற்றொரு சாதனையாளர்

அதற்கு கவாஸ்கர் பதில் அளித்ததாவது: "நல்ல கேள்வி. தற்போது அந்த பெவிலியனுக்கு தோனியின் பெயரை வைத்துள்ளனர். அந்த பகுதியில் இருக்கும் மற்றொரு சாதனையாளரின் பெயரை மைதானத்திற்கு வைக்கலாம்.

தோனி மைதானம்

தோனி மைதானம்

ராஞ்சியில் பெரிய சாதனையாளர் தோனி தான். இந்த மைதானமே மகேந்திர சிங் தோனி மைதானம் என்று தான் அழைக்கப்படவேண்டும். அது தான் ராஞ்சியின் மகனுக்கு செய்யும் மரியாதை என்றார். அவரின் இந்த கருத்துக்கு நாடு முழுவதிலும் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

Story first published: Saturday, March 9, 2019, 18:37 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
Not just the pavilion, whole stadium should have been called MS Dhoni stadium says Sunil Gavaskar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X