For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நெருக்கடிக்கு மத்தியில் ஆட விரும்பவில்லை.. அஸ்வின் அதிரடி பேட்டி #Ashwin

By Veera Kumar

சென்னை: சாதனைகளை மனதில் வைத்து ஆடி, நெருக்கடியை ஏற்படுத்தி, எனது இயல்பான ஆட்டத்தை இழக்க விரும்பலில்லை என்று இந்திய ஸ்பின் பவுலர் அஸ்வின் தெரிவித்தார்.

சென்னையில், அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த ஒரு சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்று இதுவரை நான் விளையாடியது இல்லை. எனக்குள்ள வாய்ப்பை பயன்படுத்தி ஆடி வருகிறேன்.

சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும்போது எவ்வளவு சிறப்பாக ஆடுகிறோம் என்று கணக்கிட்டு பார்க்க தேவையில்லை. இப்படி சாதனைகளை பார்த்துக்கொண்டு ஆடினால், விளையாட்டில் ஈடுபாடு இருக்காது. எனவே, நான் எந்த சாதனையையும் நினைத்துக்கொண்டு ஆடுவதாக இல்லை.

நல்ல ஃபார்ம்

நல்ல ஃபார்ம்

இப்போது நான் நல்ல ஃபார்மில் உள்ளேன். கடந்த ஓராண்டாகவே, அதை நான் உணர முடிகிறது. எனது கைகளில் இருந்து பந்து ரிலீஸ் ஆகும்போதே அதை உணர முடியும். எனது பந்து வீச்சில் எது தப்பாக மாறியது, எது சரியாக உள்ளது என்பது குறித்து மட்டுமே நான் யோசித்துக் கொள்வது வழக்கம். ரிதம் வர வேண்டியதே முக்கியம். ரிதம் மட்டும் வந்துவிட்டால் எந்த பிட்சிலும் சிறப்பாக பந்து வீச முடியும். சில நேரங்களில் பந்து வீச ஆரம்பித்ததுமே ரிதம் வருவதில்லை. சற்று தாமதமாக ரிதம் வருவதை உணர்ந்துள்ளேன்.

பெரிய பேட்ஸ்மேன்கள் அவுட்

பெரிய பேட்ஸ்மேன்கள் அவுட்

குமார் சங்ககாரா, டிவில்லியர்ஸ், கனே வில்லியம்சன் ஆகிய மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் எனது பந்து வீச்சில் அடிக்கடி அவுட் ஆகியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதை எனது அதிருஷ்டமாக கருதுகிறேன். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மிகவும் கஷ்டமானதாக இருக்கும் என்று கணிக்கிறேன். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ள தீவிர ஹோம்-ஒர்க் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஓய்வில் அஸ்வின்

ஓய்வில் அஸ்வின்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளில் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அஸ்வின் இவ்வாறு கூறினார். 39 டெஸ்ட் போட்டிகளில், 220 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பவுலர் அஸ்வின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைக்கு வாய்ப்பு

சாதனைக்கு வாய்ப்பு

முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோரை முந்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை டெஸ்ட் அரங்கத்தில் பெற அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு நெருக்கடியில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

Story first published: Tuesday, October 18, 2016, 12:45 [IST]
Other articles published on Oct 18, 2016
English summary
"As of now, I am not looking at any numbers or chasing any targets. I am just enjoying the space I am in. When you are really doing well, you don't think about how well you are doing as that can lead to losing out on enjoyment from the game. So, at the moment I am not really looking too far ahead," Ashwin told reporters at a promotional event on Monday (Oct 17). With 220 wickets, highest by any bowler in his first 39 games, Ashwin admitted that he is going through a nice phase in his career currently.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X