For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு தரல.. இதில் புது வீரர் வேற யா ? காமெடி பண்றாங்க.. நியூசி. வீரர் கருத்து

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் தூல் பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் அறையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ,ராகுல் ,முகமது சமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் பங்கேற்கின்றனர்.

வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடரில் முழு பலத்துடன் கூடிய இந்திய அணியை பிசிசிஐ களம் இறக்கி உள்ளது.

டி20 உலககோப்பை - வங்கதேசத்துக்கு எதிராக ரோகித் வைத்த டிவிஸ்ட்.. பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம்டி20 உலககோப்பை - வங்கதேசத்துக்கு எதிராக ரோகித் வைத்த டிவிஸ்ட்.. பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம்

வீணான வாய்ப்பு

வீணான வாய்ப்பு

இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பிசிசிஐயை சோதித்துப் பார்த்திருக்கலாம் என்று பல கிரிக்கெட் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் வீணடித்து வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் என ஆறு போட்டிகளில் இந்திய அணி விளையாடியது.

ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு

ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு

இதில் சஞ்சு சாம்சனுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. இந்த நிலையில், வரும் நான்காம் தேதி தொடங்க உள்ள வங்கதேச தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் தூல், வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை சேர்க்காமல் ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

புரியவில்லை

புரியவில்லை

ரஜத் பட்டிதார் நன்றாக விளையாடுகிறார் என்று எனக்கு தெரியும். ஆனால் சாம்சனுக்கு போன்ற திறமை வாய்ந்த வீரர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. வங்கதேச தொடரிலாவது சோதித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் அவரை வங்கதேச தொடரில் சேர்க்காமல் நீக்கிவிட்டது ஏன் என்று எனக்கு புரியவில்லை. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தராமல் எதற்கு ரஜத் பட்டிதார் என்ற புதிய வீரரை அணியில் சேர்த்து இருக்கிறீர்கள்.

2 பேருமே இல்லை

2 பேருமே இல்லை

அக்டோபர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலே ரஜத் பட்டிதார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது வங்கதேச தொடரிலும் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது. எனினும் 17 பேர் கொண்ட இந்திய அணியில் கூட சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படாதது தான் தற்போது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Friday, December 2, 2022, 18:37 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
NZ EX cricketer simon doull slams why sanju samson not being selected for bangladesh series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X