For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: "செக்ஸ்" ட்வீட்.. அவசர அவசரமாக மன்னிப்பு கொடுத்து.. களமிறக்கும் இங்கிலாந்து

இங்கிலாந்து: இதோ வந்தாச்சு.. ஓலே ராபின்சன். தண்டனை காலம் முடிவடைந்து இந்தியாவுக்கு எதிராக விளையாட தயாராகிவிட்டார்.

வாய்ப்பு கிடைத்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே தன்னை ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக நிரூபித்த ஓலே ராபின்சன், "பாலியல் ட்வீட்" காரணமாக இப்போது அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஓய்வில் இருக்கிறார்.

10 நிமிடம் இடைவெளியில்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பிளேயர்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் அணியில் 10 நிமிடம் இடைவெளியில்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பிளேயர்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் அணியில்

ஆனால், அவருக்கு விரைவாக தண்டனையில் காலம் நிறைவு பெறவுள்ளது. ஆம்! ஒரு முக்கிய தொடரில் மீண்டும் களமிறங்கவுள்ளார் ஓலே ராபின்சன்.

7 விக்கெட்டுகள்

7 விக்கெட்டுகள்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையே கடந்த மாதம் லண்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலே ராபின்சன், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை, 42 ரன்களும் எடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஆனால், அவரது தனிப்பட்ட நடத்தை அவரை கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டது.

பாலியல் ட்வீட்

பாலியல் ட்வீட்

இங்கிலாந்தின் அறிமுக வீரர் ஓலே ராபின்சன், 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த டிவீட்ஸ் சர்ச்சையில் சிக்கியது. அவர் தனது ட்வீட் ஒன்றில், "வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல், இனவெறி குறித்தும் ட்வீட் செய்திருந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையாக, அதற்கு ராபின்சன் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார்.

மன்னிக்க முடியாது

மன்னிக்க முடியாது

இதுகுறித்து அவர், எனது தொழில் வாழ்க்கையின் இந்த மிகப் பெரிய நாளில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் ட்வீட்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நான் இனவெறியாளன் அல்ல, நான் sexist அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன், அந்த நேரத்தில் எனது மனநிலையை மீறி நான் செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை. அந்தக் காலத்திலிற்கு நான் ஒரு மனிதனாக முதிர்ச்சியடைந்தேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன். கடந்த சில ஆண்டுகளில், எனது வாழ்க்கையை மாற்ற நான் கடுமையாக உழைத்தேன். நான் முதிர்ச்சியடைந்தேன். நான் புண்படுத்திய அனைவரிடமும், எனது அணி வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விளையாட தடை விதித்தது. இதையடுத்து அவர் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில், தான் விளையாடி வந்த சசெக்ஸ் அணியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 30ம் தேதி அவர் மீதான புகார் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மீண்டும் இங்கி., அணியில்

மீண்டும் இங்கி., அணியில்

இதில், அவருக்கு 8 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டாலும், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் தொடர் மற்றும் சசெக்ஸ் அணிக்காக அவர் விளையாடாத போட்டிகளை கணக்கில் கொண்டு, அவர் உடனடியாக சர்வதேச கிரிக்கெட் களத்துக்கு திரும்பலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஓலே ராபின்சன், இந்திய அணிக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடினமான நேரம்

கடினமான நேரம்

இதுகுறித்து தனது தனது பாரத்தை இறக்கி வைத்துள்ள ராபின்சன், "இந்த முடிவை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நான் முன்பு கூறியது போல, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட ட்வீட்களுக்காக நான் ரொம்பவே வெட்கப்படுகிறேன். அவற்றின் அர்த்தங்களை எந்த தடையுமின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய காயத்திற்கு மிகவும் வருந்துகிறேன். எனது தொழில் வாழ்க்கையில் எனது குடும்பத்துக்கும் எனக்கும் இது மிகவும் கடினமான நேரம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, July 3, 2021, 18:49 [IST]
Other articles published on Jul 3, 2021
English summary
Ollie Robinson back to cricket, will be available for India Test series - ஓலே ராபின்சன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X