For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓரமாய் போய் நில்லுமா?.. பாக். தொகுப்பாளினிக்கு நடந்த காமெடி சம்பவம்.. இணையத்தில் ரசிகர்கள் சிரிப்பலை

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த தொகுப்பாளினிக்கு, வீரர் ஒருவர் உயிர் பயத்தை காட்டிய வீடியோ இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரை போன்றே தென்னாப்பிரிக்காவில் சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐபிஎல்-ல் முதலீடு செய்திருப்பவர்களே, இந்த தொடரிலும் அணிகளை வாங்கியுள்ளனர்.

அதன்படி கடந்த ஜனவரி 18ம் தேதியன்று நடைபெற்ற 12வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் எம்ஐ கேப் டவுன் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் தான் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது.

கோயிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி.. விதிகளுக்கு உட்பட்டு சட்டையின்றி தரிசனம்.. 2 பேர் மிஸ்ஸிங் கோயிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி.. விதிகளுக்கு உட்பட்டு சட்டையின்றி தரிசனம்.. 2 பேர் மிஸ்ஸிங்

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் இன்னிங்ஸில் மார்கோ யான்சென் அதிரடியாக விளையாடி வந்தார். ஆட்டத்தின் 13வது ஓவரில் சாம் கரண் வீசிய பந்தை அவர் டீப் மிட் விக்கெட்டில் வேகமாக ஓங்கி அடித்தார். மிகவும் வேகமாக பவுண்டரியை நோக்கி சென்ற அந்த பந்தை தடுப்பதற்காக இரு புறத்திலும் இருந்து ஓடி வந்த வீரர்கள், டைவ் அடித்து முயற்சி செய்தார்கள்.

சுவாரஸ்ய நிகவு

சுவாரஸ்ய நிகவு

ஆனால் அதே நேரத்தில் தான் அங்கு பாகிஸ்தானை சேர்ந்த தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ், பிரபலம் ஒருவரிடம் பேட்டி எடுத்து வந்தார். அப்போது டைவ் அடித்து வந்த வீரர் நேராக தொகுப்பாளினியின் கால்களிலேயே மோத, அவர் எதிர்பாராத வகையில் கீழே விழுந்துவிட்டார். இதுகுறித்த வீடியோவை இணையத்தில் பரப்பி வரும் ரசிகர்கள் ஓரமா போய் நிற்க வேண்டியது தானே என கிண்டலடித்து வருகின்றனர்.

 காயத்தின் நிலை

காயத்தின் நிலை

அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒளிபரப்பு நிறுவனம், உங்களுக்கு ஒன்னும் ஆகவில்லையே என்று கேட்டது. இதற்கு பதில் கொடுத்துள்ள ஜைனப் அப்பாஸ், நான் எப்படியோ தப்பித்துவிட்டேன் என்று தான் கூற வேண்டும். ஆனால் அந்த வலி எனக்குத்தான் தெரியும். அதற்காக நான் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன் என வேடிக்கையாக கூறியுள்ளார்.

போட்டியின் முடிவு?

போட்டியின் முடிவு?

இதுபுறம் இருக்க, இந்த பரபரப்பான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 172 ரன்களை குவித்து வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 20, 2023, 11:52 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Pakistan Sports anchor Zainab Abbas falls during commentary in SA20, here is the full video of that
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X