For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெகா தவறு! வரலாற்று வாய்ப்பை வீணடித்த பாபர் அசாம்.. கடினமான ஆடுகளத்தில் இங்கிலாந்து வென்றது எப்படி?

மெல்போர்ன் : 1992 ஆம் ஆண்டு உலககோப்பையை இம்ரான் வென்று வரலாற்று சாதனை படைத்தது போன்ற வாய்ப்பை, பாபர் அசாம், வீணடித்து விட்டார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதிய இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தை பாபர் அசாம், பார்த்திருந்தாலே சில பாடத்தை பாகிஸ்தான் கற்று இருக்கலாம்.

இரண்டாவது அரை இறுதியில் இந்திய அணி என்ன தவறை செய்ததோ, அதையே தான் பாகிஸ்தானும் செய்தது. மழை காரணமா என்று தெரியவில்லை,மெல்போர்ன் ஆடுகளம் சற்று தோய்வாக இருந்தது.பந்து பேட்டுக்கு அதிவேகமாக வரவில்லை. இதனால் ரன் குவிக்க பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர்.

நாங்க உலககோப்பையை வென்றதே இப்படி தான்.. பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? - இங்கிலாந்து கேப்டன் பட்லர்நாங்க உலககோப்பையை வென்றதே இப்படி தான்.. பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? - இங்கிலாந்து கேப்டன் பட்லர்

காரணம்

காரணம்

விக்கெட்டுகள் விழுந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் பவர் பிளேவில் கொஞ்சம் பொறுமை காத்ததாகவே தோன்றியது. இது போன்ற ஆடுகளங்களில் பவர் பிளே மிகவும் முக்கியம். அப்போது நீங்கள் தைரியமான ஆட்டத்தை விளையாட வேண்டும். வந்தால் மலை போனால் ?? என்ற நோக்கில் விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.இந்த ஆடுகளத்தில், பாக்.எதிராக 138 என்ற இலக்கை எட்டுவது கடினம் என்பதை அறிந்த ஜாஸ்பட்லர் முதல் நான்கு ஓவரில் அடித்து ஆட வேண்டும் என தைரியமாக விளையாடியது தான் இங்கிலாந்து அணி இன்று வெற்றி பெற்றதற்கு காரணம்.

புதிய முயற்சி

புதிய முயற்சி

அதுவும் நஷிம் ஷா பந்தை பின்னால் தூக்கி சிக்ஸ் அடித்ததெல்லாம் வேற லெவல்.இது தான் பாகிஸ்தான் செய்ய தவறிவிட்டது. டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது. " நீங்கள் தொடர்ந்து ஒரே வேலையை , ஒரே மாதிரி தயாராகி கொண்டிருந்தால் நீங்கள் பின்னோக்கி செல்கிறீர்கள் என்று அர்த்தம்.. புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள் முன்னேற முடியும் புதிய ஷாட்டுகளை ஆட வேண்டும். அப்போதுதான் டென்னிசில் நீங்கள் வெற்றி பெற முடியும் என்று பெடரர் கூறியிருக்கிறார்.

மெகா தவறு

மெகா தவறு

அதை தான் கிரிக்கெட்டுக்கும் , டி20 கிரிக்கெட்டில் நீங்கள் உங்களுடைய orthodox ஷாட் ஆடினால் இனி ரன் கிடைப்பது கஷ்டம். புதிதாக ஷாட்டுகளை கற்று நீங்கள் ஆட வேண்டும். என்னைப் பொருத்தவரை ரிஸ்வான் அதிரடியாக ஆடி பாபர் அசாம், Anchor ரோல் செய்திருக்க வேண்டும். ஆதில் ரசித் ஓவரில் தூக்கி அடித்தால் கேட்ச் ஆகி விடுகிறது என்று இந்திய ஆட்டத்திலேயே பாகிஸ்தான் வீரர்கள் பார்த்திருப்பார்கள்.அப்படி இருக்க முடிந்தவரை தரையிலே Gap பார்த்து அடித்து ஒவ்வொரு பந்துக்கும் இரண்டு, மூன்று ரன்கள் ஓடி இருக்கலாம்.

8 ரன்கள்

8 ரன்கள்

பாகிஸ்தான் அணி ஒரு 20 ரன்கள் கூட அடித்து இருந்தாலும் இன்று அவர்கள் உலகக் கோப்பையை வென்றிருப்பார்கள். . இங்கிலாந்து தனது பேட்டிங்கில் வெற்றி பெற்றதற்கு மேலே சொன்ன இதுதான் காரணம். ஜாஸ் பட்லர் அதிரடியாக ஆடினார்.ஸ்டோக்ஸ் ஆங்கர் ரோல் செய்து வெற்றியை தேடி தந்தார். மொயின் அலி, தனக்கு கிடைத்த பந்துகளை பவுண்டரிளாக மாற்றினார்கள். டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய பணிகளை இப்படி பிரித்துக் கொண்டாலே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பாகிஸ்தான் 8 ரன்கள் Wide ஆக கொடுத்தது பெருங்குற்றம்..

Story first published: Monday, November 14, 2022, 10:32 [IST]
Other articles published on Nov 14, 2022
English summary
Pakistan captain Babar Azam missed the historical chance to win t20 WC
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X