For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்கள் தோற்றதே அந்த ஒரு சம்பவத்தால் தான்.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கருத்து

மெல்போர்ன் : டி20 உலககோப்பையை 2வது முறையாக இங்கிலாந்து அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இதன் மூலம், 1992 உலககோப்பையில் பாகிஸ்தானிடம் மெல்போர்னில் அடைந்த தோல்விக்கு, இங்கிலாந்து அணி பழித் தீர்த்து கொண்டது.

இதன் மூலம், பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

டி20 உலககோப்பை இறுதி போட்டி - அது தான் பெரிய திருப்புமுனையே.. பாகிஸ்தான் தோல்விக்கு 4 முக்கிய காரணம்டி20 உலககோப்பை இறுதி போட்டி - அது தான் பெரிய திருப்புமுனையே.. பாகிஸ்தான் தோல்விக்கு 4 முக்கிய காரணம்

தகுதியான நபர்கள்

தகுதியான நபர்கள்

இந்த நிலையில் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேசியதை தற்போது காணலாம். இங்கிலாந்து அணிக்கு என் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன். அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியான நபர்கள். அவர்கள் கடுமையாக களத்தில் போராடி நெருக்கடி கொடுத்தார்கள்.

இயல்பான ஆட்டம்

இயல்பான ஆட்டம்

இந்த தொடரில் நாங்கள் முதல் 2 போட்டியில் தோல்வியை தழுவினோம். ஆனால் அதன் பிறகு அனைத்து போட்டியிலும் வென்று இறுதிப் போட்டி வரை வென்றது மிகவும் சிறப்புமிக்க செயலாக நான் கருதுகிறேன். என் அணி வீரர்களிடம் இறுதிப் போட்டியில் உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினேன்.

20 ரன்கள் குறைவு

20 ரன்கள் குறைவு

ஆனால் பேட்டிங்கில் நாங்கள் ஒரு 20 ரன்களை குறைத்து அடித்து விட்டோம் என கருதுகிறேன். இருப்பினும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். உலகத்திலேயே சிறந்த பந்துவீச்சாளர்கள் கொண்ட அணியாக பாகிஸ்தான் இருக்கிறது. ஷாகின் ஆப்ரிடி பந்துவீசும் போது பாதியில் வெளியேறினார்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

அது, எங்கள் அணிக்கு பெரிய பாதகத்தை கொடுத்தது. ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையே அது தான். ஆனால் போட்டியின் போது வீரர்கள் காயம் அடைவது எல்லாம் சகஜம் தான். ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது. எங்கள் சொந்த நாட்டில் விளையாடியது போல் ஒரு உணர்வு தந்தது. எங்கள் ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எக்னறு பாபர் அசாம் கூறினார்.

Story first published: Sunday, November 13, 2022, 19:15 [IST]
Other articles published on Nov 13, 2022
English summary
Pakistan captain Babar azam on loss vs England in icc t20 world cup final நாங்கள் தோற்றதே அந்த ஒரு சம்பவத்தால் தான்.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X