For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மத்தவங்களை சொல்றீங்களே.. நீங்க மட்டும் என்ன பண்ணீங்க? பாக். கேப்டனை கலாய்க்கும் ரசிகர்கள்

செஞ்சுரியன் : தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அதை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். ஒரு அணியின் கேப்டன் இப்படி பொறுப்பில்லாமல் அவுட் ஆவது சரியா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

சடசடவென விக்கெட்கள்

சடசடவென விக்கெட்கள்

பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா இடையே ஆன டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தென்னாபிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சடசடவென விக்கெட்களை இழந்தது.

பாபர் ஆசாம் அரைசதம்

பாபர் ஆசாம் அரைசதம்

பாபர் ஆசாம் 71 ரன்களும், அசார் அலி 36 ரன்களும் எடுத்ததே அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் எடுத்த அதிக ரன்கள் ஆகும். 86 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து பாகிஸ்தான் தவித்த போது பாபருடன் இணைந்து பேட்டிங் ஆட வந்தார் கேப்டன் சர்ப்ராஸ்.

4 பந்துகள் மட்டுமே சந்தித்தார்

4 பந்துகள் மட்டுமே சந்தித்தார்

வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே களத்தில் நின்ற சர்ப்ராஸ் 4 பந்துகள் மட்டுமே சந்தித்து ஒலிவியர் பந்தில் பௌல்டு அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்தனர் பாகிஸ்தான் ரசிகர்கள்.

இவர் மட்டும் ஒழுங்கா?

ஒரு ரசிகர் குறிப்பிடுகையில், விக்கெட் கீப்பிங் செய்யும் போது மற்ற பேட்ஸ்மேன்களை வண்டி வண்டியாக கழுவி ஊத்துகிறார். ஆனால், இவர் பேட்டிங் செய்யும் போது இவரும் அதே தான் செய்கிறார் என கூறி இருந்தார். இது போல ஏராளமான ட்வீட்கள் குவிந்து கிடக்கின்றன.

Story first published: Thursday, December 27, 2018, 18:07 [IST]
Other articles published on Dec 27, 2018
English summary
Pakistan Captain Sarfraz Ahmed criticized for getting out for a duck against Newzealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X