For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குத்திக்காட்டும் பாக். கேப்டன்.. நாங்க இங்கிலாந்தில் நல்லா விளையாண்டோம்!

By Aravinthan R

Recommended Video

நாங்க இங்கிலாந்தில் நல்லா விளையாண்டோம்!- குத்திக்காட்டும் பாக் கேப்டன்..வீடியோ

இஸ்லாமாபாத்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

மேலும், தற்போது இங்கிலாந்தில் தடுமாறி வரும் இந்தியாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தான் அதிக பயிற்சிப் போட்டிகளில் ஆடியதால் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டது என கூறி இருக்கிறார்.

pakistan captain sarfraz warns india ahead of asia cup


ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இலங்கை அணி மீது நடத்திய தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பின் பல அணிகளும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்துவிட்டது. அதனால், பாகிஸ்தான் சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு நாட்டில் தான் சொந்த மண் போல கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெற்ற அனுபவத்தை, ஆசிய கோப்பை தொடரின் போது இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சர்பராஸ். விராட் கோஹ்லியின் அணி வலிமையானதாக இருக்கும் எனவும், இப்போதைக்கு எங்கள் அணி வீரர்களின் உடற்தகுதியில் தான் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

சர்பராஸ் இங்கிலாந்து தொடர் குறித்து பேசுகையில், பாகிஸ்தான் அணி 25 நாட்கள் முன்பே சென்று, மூன்று பயிற்சி போட்டிகளில் பங்கேற்றோம். அதுதான், எங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.



தற்போது இங்கிலாந்தில், இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் தான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா பல பயிற்சி போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும் என கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் கூறிய நிலையில், பாகிஸ்தான் கேப்டனும் அதையே தெரிவித்துள்ளார்.








Story first published: Friday, August 17, 2018, 8:34 [IST]
Other articles published on Aug 17, 2018
English summary
Pakistan captain Sarfraz warns India ahead of Asia cup, as they have UAE experience as advantage.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X