For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை- இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த பாக். வீரர் ஹரிஸ் ரவுஃப்.. என்னவாம் ?

கராச்சி : டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.இந்த போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கான ஆடுகளம் தயாரிக்கும் பணி ஏற்கனவே மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த முறை டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பழி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹரிஷ் ரவுப் , இந்திய அணிக்கு எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.

என்ன டா இது ஆச்சரியம்.. வானும் -மண்ணும் பிரெண்ட்ஷிப் ஆனது.. டிவிட்டரில் ஜடேஜா, மஞ்சரேக்கரின் நட்புஎன்ன டா இது ஆச்சரியம்.. வானும் -மண்ணும் பிரெண்ட்ஷிப் ஆனது.. டிவிட்டரில் ஜடேஜா, மஞ்சரேக்கரின் நட்பு

மெல்போர்ன் மைதானம்

மெல்போர்ன் மைதானம்

அதில் இந்தியா பாகிஸ்தான் மோதும் தொடக்க ஆட்டம் மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். ஏனென்றால் அது என்னுடைய சொந்த மைதானம் போன்றது. பிக் பேஸ் லீக் தொடரில் நான் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் தான் விளையாடுகிறேன்.

சுலபம் கிடையாது

சுலபம் கிடையாது

நான் அங்கு சிறப்பாக பந்து வீசினால் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் அவர்களால் அதனை எதிர்கொள்வது சுலபம் கிடையாது என்று ஹரிஷ் ரவுப் பேசியிருக்கிறார். மேலும் மெல்போர்ன் ஆடுகளம் எப்படி செயல்படும் என்று எனக்கு நன்றாக தெரியும். நான் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக எப்படி பந்து வீசு வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

சுலபமாக தெரிந்தது

சுலபமாக தெரிந்தது

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே கடும் நெருக்கடிகளும் அழுத்தமும் இருக்கும். கடந்து முறை டி20 உலக கோப்பையில் விளையாடும் போது எனக்கு நெருக்கடியை உணர முடிந்தது. ஆனால் ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இரண்டு போட்டியில் விளையாடும் போது எனக்கு சுலபமாக தெரிந்தது. ஏனென்றால் நான் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பினேன் என்று ஹரிஸ் ரவுப் கூறினார்.

ஹரிஸ் ரவுஃப் செயல்பாடு

ஹரிஸ் ரவுஃப் செயல்பாடு

இந்த பேச்சு ரசிகர்களிடையே நகைச்சுவை பொருளாக அமைந்துவிட்டது ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இப்படி தலைகனத்துடன் பேசக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹரிஷ் ரவுப், பிக் பாஸ் தொடரில் 18 ஆட்டங்களில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சராசரியாக ஒரு ஓவருக்கு 7.71 ரன்களை கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

ஹரிஷ் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்.ஆசிய கோப்பை தொடரில் எட்டு விக்கெட்டுகளை எடுத்த அவர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் ஐந்து போட்டிகள் விளையாடி 8 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். ஆசியக் கோப்பை தொடருக்கு முன் ஆசிப் அலி நான் தினமும் 150 சிக்ஸர்களை பயிற்சியில் அடிக்கிறேன் என்று கூறி போட்டி நடைபெறும் போது சொதப்பி மொக்கை வாங்கினார். தற்போது அதே மாதிரி ஹரிஸ் ரவுப்க்கும் நடக்கும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Friday, September 30, 2022, 13:03 [IST]
Other articles published on Sep 30, 2022
English summary
Pakistan cricketer Haris Rauf gives warning to the indian team in t20 worldcup டி20 உலககோப்பை- இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த பாக். வீரர் ஹரிஸ் ரவுஃப்.. என்னவாம் ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X