For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

35% சம்பள உயர்வு வேண்டும்... பாக். கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி

By Mathi

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சம்பள உயர்வு கோரி குரல் எழுப்பியுள்ளனர். 35 சதவீத சம்பள உயர்வை அவர்கள் கேட்டுள்ளனர்.

கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள வீரர்களுக்கு 35 சதவீத அளவுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

விரைவில் ஒப்பந்த வீரர்களின் பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிடவுள்ள நிலையில் இந்த ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்துள்ளது.

கேப்டன் மிஸ்பா தலைமையில்

கேப்டன் மிஸ்பா தலைமையில்

பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளுக்கான கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையில் சில மூத்த வீரர்கள் வாரியத் தலைவர் நஜம் சேத்தியை சமீபத்தில் சந்தித்து ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்தனர்.

நல்ல சம்பளம் தாங்க பாஸ்

நல்ல சம்பளம் தாங்க பாஸ்

சந்திப்பின்போது மிஸ்பா கூறுகையில், சமீப காலமாக வீரர்களுக்கு முறையாக ஊதியம் தரப்படுவதில்லை. அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியமும் நல்ல சம்பளம் தருகிறார்கள். நமது வீரர்களுக்குத்தான் சரியான சம்பளம் தரப்படுவதில்லை என்றாராம் மிஸ்பா.

30 முதல் 35 சதவீதம் உயர்வு அவசியமுங்க...

30 முதல் 35 சதவீதம் உயர்வு அவசியமுங்க...

எனவே நமது வீரர்களுக்கு 30 முதல் 35 சதவீத ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம் மிஸ்பா.

ஆகட்டும் பார்க்கலாம்

ஆகட்டும் பார்க்கலாம்

மிஸ்பாவின் கூற்றையும், பிற வீரர்களின் கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்டு நஜம் சேத்தி, அதுகுறித்து பரிசீலிப்போம் என்றும் உரியவர்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும் உறுதியளித்தாராம்.

மாசச் சம்பளம் ரூ. 3.25 லட்சம்தான்

மாசச் சம்பளம் ரூ. 3.25 லட்சம்தான்

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஒப்பந்த வீரர்களுக்கு மாதம் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

கடந்த வருட உயர்வு 15 சதவீதம்

கடந்த வருட உயர்வு 15 சதவீதம்

கடந்த வருடம்தான் தனது வீர்ரகளுக்கான சம்பளத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

Story first published: Monday, January 13, 2014, 13:11 [IST]
Other articles published on Jan 13, 2014
English summary
Pakistan cricketers have asked for a 30 to 35 percent hike in their central contracts from their Board which would soon be announcing the list of centrally contracted players for the year 2014. A board official said the Test and ODI captain Misbah-ul-Haq and some senior players had met with the acting PCB Chairman Najam Sethi requesting him for the pay hikes in the central contracts. "Speaking on behalf of the players Misbah pointed out that the players had not got proper pay hike for a while, although in all other countries the boards had given handsome raise to their players in their central contracts," the official said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X