For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விரைவில் டெஸ்ட் கேப்டனாகும் அஸ்வின்.. இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரர்.. பாக். வீரர் புகழாரம்

கராச்சி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி புதிய கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சா டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். அஸ்வின் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்காக உறுதுணையாக இருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் 400 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் அஸ்வின் படைத்திருக்கிறார்.

கடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட அஸ்வின் மொத்தமாக 112 ரன்கள் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்தியாவை காப்பாற்றிய அஸ்வின்.. 2வது டெஸ்ட்..தோல்வி விளிம்புக்கு சென்று த்ரில் வெற்றி பெற்றது எப்படி இந்தியாவை காப்பாற்றிய அஸ்வின்.. 2வது டெஸ்ட்..தோல்வி விளிம்புக்கு சென்று த்ரில் வெற்றி பெற்றது எப்படி

தகுதியான நபர்

தகுதியான நபர்

குறிப்பாக இரண்டாவது டெஸ்டில் கடைசி இன்னிங்சில் 42 ரன்கள் குவித்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதிவுக்கு அஸ்வின் தகுதியான நபராக இருக்கிறார். அவர் இன்னும் நிறைய காலம் கிரிக்கெட் விளையாடுவார்.

அணியை காப்பாற்றுகிறார்

அணியை காப்பாற்றுகிறார்

களத்தில் அஸ்வின் அறிவுபூர்வமாக செயல்படுகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். களத்தில் அஸ்வின் நிற்கும் போது என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறார். இந்தியா கடினமான அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம் அஸ்வின் அதனை அமைதியாக கையாண்டு அணியை காப்பாற்றுகிறார். அவர் விளையாடிய இன்னிங்ஸ் மூலம் தான் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

சதத்திற்கு நிகரானது

சதத்திற்கு நிகரானது

இதேபோன்று பலமுறை தனது பேட்டிங் மூலம் அஸ்வின் இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார். கும்ப்ளே விளையாடிய காலத்தில் அவர் இல்லை என்றால் இந்திய அணி பலவீனமாக காணப்படும். அதேபோன்ற ஒரு சூழல்தான் அஸ்வினுக்கும் இருக்கிறது. அஸ்வின் அடித்தது வேண்டுமானாலும் வெறும் 42 ரன்கள் ஆக இருக்கலாம். ஆனால் அது ஒரு சதத்திற்கு நிகரானது.

அடுத்த டெஸ்ட் கேப்டன்

அடுத்த டெஸ்ட் கேப்டன்

இந்திய அணியில் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் செயல்பட்டாலும் ராகுலின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் சொதப்பலாகவே காணப்படுகிறது. இதனால் அஸ்வின் அந்த இடத்திற்கு சரியான நபராக இருப்பார் என பல்வேறு கிரிக்கெட் விமர்சனங்களும் கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, December 27, 2022, 17:54 [IST]
Other articles published on Dec 27, 2022
English summary
Pakistan ex cricketer Danish kaneria said ashwin is next contender for india test captaincy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X