For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு கிளம்பு!! 82 ஆண்டுகள் கழித்து வெளிநாட்டு தொடரில் வீரர்கள் மீது நடவடிக்கை

மும்பை : சுமார் 82 ஆண்டு காலம் கழித்து இந்திய அணியில் ஒழுங்கீனம் காரணமாக வீரர்கள் வெளிநாட்டு தொடரில் பாதியில் இருந்து திருப்பி அனுப்பும் நிகழ்வு நடந்தேறியுள்ளது.

ஹர்திக் பண்டியா - ராகுல் இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சையாக பேசியதால் இடை நீக்கம் செய்யப்பட்டு ஆஸ்திரேலிய தொடரில் பாதியிலேயே இந்தியாவுக்கு திரும்ப உள்ளனர்.

விசாரணை நடத்த முடிவு

விசாரணை நடத்த முடிவு

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பண்டியா மற்றும் ராகுல் பெண்கள் குறித்தும், தங்கள் பார்ட்டி வாழ்க்கை குறித்தும் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பின. அதற்காக இருவர் மீதும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

இடை நீக்கம்

இடை நீக்கம்

விசாரணை முடியும் வரை இருவரையும் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க சிட்னியில் தங்கியிருந்த இரு வீரர்களும் நாடு திரும்ப உள்ளனர்.

82 ஆண்டுகள் கழித்து..

82 ஆண்டுகள் கழித்து..

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுமார் 82 ஆண்டுகள் கழித்து ஒழுங்கீனம் காரணமாக வீரர்கள் வெளிநாட்டு தொடரில் இருந்து பாதியில் நாட்டுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெறுகிறது. 1936ஆம் ஆண்டு முன்னாள் வீரர் லாலா அமர்நாத் வெளிநாட்டு தொடரில் இருந்து பாதியில் நாடு திரும்பினார்.

கேப்டன் விஜயநகர மகாராஜா

கேப்டன் விஜயநகர மகாராஜா

ஆனால், லாலா அமர்நாத் நிகழ்வில் கூட அவர் மீது பெரிய குற்றம் எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. 1936இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில், விஜயநகரத்தின் மகாராஜா தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். அரசர் என்றால் அரசியல் இல்லாமலா?

கடைசியாக பேட்டிங்

கடைசியாக பேட்டிங்

1936இல் இந்திய அணி இங்கிலாந்து சென்ற போது லாலா அமர்நாத்துக்கு இருந்த முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் அவரை எல்லா போட்டியிலும் ஆட வைத்ததோடு, சில போட்டிகளில் முன் வரிசையில் பேட்டிங் கொடுக்காமல் கடைசியாக பேட்டிங் கொடுத்து கடுப்பேற்றி உள்ளனர்.

கோபத்தில் பேசினார்

கோபத்தில் பேசினார்

அதை கண்டு ஒரு முறை பேட்டிங் முடித்து விட்டு வரும் போது பஞ்சாபி மொழியில், "இங்கே என்ன நடக்கிறது என எனக்கு தெரியும்" என கோபமாக தனக்கு தானே கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு அனுப்பினர்

இந்தியாவுக்கு அனுப்பினர்

பஞ்சாபி புரியாத "கேப்டன் மகாராஜா"வும், வெள்ளைக்கார மேனேஜர் ஜாக் பிரிட்டன் ஜோன்ஸ்-உம் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து மற்ற வீரர்களிடம் கையெழுத்து வாங்கி, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

உரிய தண்டனையே

உரிய தண்டனையே

அந்த நிகழ்வுடன் ஒப்பிடுகையில் பண்டியா - ராகுலின் சர்ச்சை பேச்சுக்கு உரிய தண்டனையே அவர்களுக்கு கிடைத்துள்ளது. மற்ற கிரிக்கெட் வீரர்கள் என்றாலே இப்படி தான் இருப்பார்களோ என யோசிக்க வைக்கும் வகையில் ஏற்படும் வகையில் பார்ட்டி - பெண்கள் என பேசியுள்ளனர்.

Story first published: Saturday, January 12, 2019, 11:46 [IST]
Other articles published on Jan 12, 2019
English summary
Indian Cricketers Pandya and Rahul sent back to home from an overseas tour after 82 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X