ஒரு போட்டி கூட விளையாடவில்லை... ஐபிஎல் அணியில் இடம்.. எம்.பி பப்பு யாதவின் மகனுக்கு 'பலே' சிபாரிசு!

Posted By:

பாட்னா: ஐபிஎல் அணியில் சேர்வது என்பது இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவிற்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். ஐபிஎல் ஏலங்களில் கோடிகளில் பணம் புரளும்.

ஆனாலும் என்னதான் பணம் பெரிய விஷயமாக இருந்தாலும் ஒரு ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் கூட அடுத்த போட்டியில் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் கடைசி ஒருவருடமாக ஒரு போட்டி கூட விளையாடாமல் ஒருவர் ஐபிஎல் அணியில் இடம்பிடித்து இருக்கிறார்.

பீகாரை சேர்ந்த லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி பப்பு யாதவ் மகன் சர்தாக் ரஞ்சன் இந்த சாதனையை செய்து உள்ளார். இந்த 'வீரர்' அணியில் சேர்க்கப்பட்டதற்கு பின் பெரிய கதையே இருக்கிறது.

யார் இவர்

யார் இவர்

பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்காக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பப்பு யாதவ். தற்போது இவர் சொந்தமாக ஜன் அதிகார் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரஞ்ஜீத் ரன்ஜன் காங்கிரஸ் கட்சியில் எம்பியாக இருக்கிறார். இவர்களின் மகன் சர்தாக் ரஞ்சன் தற்போது டெல்லி ஐபிஎல் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

என்ன சாதனை

என்ன சாதனை

இவர் சென்ற வருடம் முழுக்க ஒரு போட்டி கூட விளையாடவில்லை என்பதே இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனை ஆகும். அதற்கு முன்பு நடந்த முஸ்தபா அலி கோப்பைக்கு போட்டியில் 5,3, 2,10 என 'இமாலய' ரன்களை அடித்து இருக்கிறார். ஆனால் இவ்வளவு மோசமாக விளையாடியும் இவர் டெல்லி ரஞ்சி அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

ஆனால் சென்ற வருட ரஞ்சி போட்டியில் அவர் திடீர் என்று விலகி இருக்கிறார். விளையாட விருப்பம் இல்லை என்றுள்ளார். பாடி பில்டிங் செய்து மிஸ்டர் இந்திய பட்டம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த ஒருவருடமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணியில் தேர்வு

அணியில் தேர்வு

தற்போது இவர் அம்மா மற்றும் அப்பாவின் சிபாரிசின் பேரில் 'சிகே நாயுடு கோப்பை' போட்டிக்கு இவர் டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசி ஒருவருடமாக விளையாடாமல் இவருக்கு இந்த வாய்ப்பு கிட்டி இருக்கிறது. மேலும் இவர் டெல்லி ஐபிஎல் அணி பட்டியலிலும் இருக்கிறார். இவரால் பல முக்கிய இளம் வீரர்கள் வாய்ப்பு இழந்துள்ளனர்.

Story first published: Tuesday, January 9, 2018, 12:05 [IST]
Other articles published on Jan 9, 2018
Please Wait while comments are loading...