For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதற்கு தான் மாற்றமா..? விராட் கோலியை காப்பாற்றும் முயற்சி.. பார்த்தீவ் பட்டேல் பகீர் குற்றச்சாட்டு

மும்பை : விராட் கோலியை காப்பாற்றுவதற்கான பணிகளை தேர்வு குழுவும் கேப்டன் ரோகித் சர்மாவும் செய்வதாக முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Video

Virat Kohli-க்காக அணியில் மாற்றம் செய்யும் BCCI - Parthiv Patel *Cricket

விராட் கோலி கடந்த ஆறு மாதங்களாக சரிவர விளையாட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த இங்கிலாந்து தொடரில் அவர் ஒரு முறை கூட 50 ரன்கள் அடிக்கவில்லை. டி20 போட்டியலும் அவரது ஸ்டரைக் ரேட் மிகவும் குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தோனியின் மெகா சாதனை முறியடிப்பு.. ஒரே போட்டியில் தகர்த்து காட்டிய அக்‌ஷர் பட்டேல்..ரசிகர்கள் வியப்புதோனியின் மெகா சாதனை முறியடிப்பு.. ஒரே போட்டியில் தகர்த்து காட்டிய அக்‌ஷர் பட்டேல்..ரசிகர்கள் வியப்பு

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

விராட் கோலிக்கு பதிலாக விளையாடும் வீரர்கள் நன்றாக ரன் சேர்த்து வருகின்றனர். இதனால் விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை எழுந்தன. இந்த நிலையில் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலிக்கு பதில் யார் களமிறங்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. விராட் கோலி இடத்திற்கு ஆபத்தாக இருப்பவர் சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தான். இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை கேப்டன் ரோகித் சர்மா மாற்றி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சூரியகுமார் யாதவ் விளையாடுகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல், சூரியகுமார் யாதவ் மூன்றாவது வரிசையில் களமிறங்கி ரன்களை குவித்து விட்டால், அது விராட் கோலிக்கு ஆபத்தை தரும். இதனை கருத்தில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் சூரியகுமாரை தொடக்க வீரராக களமிறக்கி விராட் கோலிக்கு வரும் ஆபத்தை தவிர்த்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பார்ததீவ் பட்டேல்

பார்ததீவ் பட்டேல்

விராட் கோலி அணிக்கு திரும்பியதும் அவருடைய மூன்றாவது இடம் வழங்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதனால்தான் கடந்த சில போட்டிகளாக நன்றாக விளையாடிய தீபக் ஹூடா இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 2, 2022, 23:30 [IST]
Other articles published on Aug 2, 2022
English summary
Parthiv Patel complaints about BCCI Try to save virat kohliஇதற்கு தான் மாற்றமா..? விராட் கோலியை காப்பாற்றும் முயற்சி.. பார்த்தீவ் பட்டேல் பகீர் குற்றச்சாட்டு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X