For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்ப நினைச்சாலும் வலிக்குது.. 2018இல் டெஸ்ட் மன்னன் ஆடிய ஆட்டம்.. பதறும் ஆஸி. பவுலர்!

சிட்னி : இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நொந்து போக வைத்த சம்பவம் 2018-19 டெஸ்ட் தொடரில் நடந்தது.

சுமார் ஒரு மாதம், நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நோகடித்தார் அந்த இந்திய வீரர்.

இதுதாங்க என்னோட ஒரே ஆசை... தன்னோட விருப்பத்தை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்இதுதாங்க என்னோட ஒரே ஆசை... தன்னோட விருப்பத்தை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

அவர் வேறு யாருமல்ல, தற்காலத்தின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என அறியப்படும் புஜாரா தான். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் அவர் செய்த சம்பவத்தை இன்றளவும் மறக்க முடியவில்லை. ஒரு பேட்டியில் புஜாரா பற்றி பெரும் வலி ஏற்படுத்தினார் என கூறி இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.

கடினமான பேட்ஸ்மேன் இவர்தான்

கடினமான பேட்ஸ்மேன் இவர்தான்

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸ், கடினமான பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு இந்தியாவின் புஜாரா தான் என குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு அந்த தொடரில் புஜாரா "கட்டை போட்டு" சிறப்பான சம்பவம் செய்தார்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

2018 - 19 இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அதுதான் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இந்தியா கைப்பற்றி இருந்தது.

டெஸ்ட் மன்னன் ஆட்டம் எப்படி?

டெஸ்ட் மன்னன் ஆட்டம் எப்படி?

அந்த தொடரை இந்தியா வெல்ல முக்கிய காரணம் புஜாரா தான். டெஸ்ட் மன்னன் என அறியப்படும் அவர் ராகுல் டிராவிட் போல எந்த அவசரமும் இன்றி நிறுத்தி நிதானமாக ரன் எடுக்கும் ஆற்றல் பெற்றவர். டெஸ்ட் பேட்ஸ்மேன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என அந்த தொடரில் பாடம் எடுத்தார் புஜாரா.

மூன்று சதம், ஒரு அரைசதம்

மூன்று சதம், ஒரு அரைசதம்

அந்த டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் ஏழு இன்னிங்க்ஸ்களில் மூன்று சதம், ஒரு அரைசதம் அடித்து இருந்தார் புஜாரா. ரன் குவித்தது கூட பெரிய விஷயமில்லை. அவர் ஆட்டமிழக்காமல் நீண்ட நேரம் களத்தில் நின்றது தான் ஆஸ்திரேலிய வீரர்களை வெறுப்படைய வைத்தது.

சந்தித்த பந்துகள்

சந்தித்த பந்துகள்

புஜாரா அந்த தொடரில் 1258 பந்துகளை சந்தித்து 521 ரன்கள் குவித்து இருந்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் அவர் தான். அவருக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் 350 ரன்கள் தான் எடுத்து இருந்தார். அதிக பந்துகளை சந்தித்ததில் சாதனையும் செய்தார் புஜாரா.

மறக்காத பாட் கம்மின்ஸ்

மறக்காத பாட் கம்மின்ஸ்

இந்த நிலையில், ஓராண்டாகியும் அந்த சம்பவத்தை மறக்கவில்லை பாட் கம்மின்ஸ். கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு இணையத்தில் பாட் கம்மின்ஸ்-இடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. கேள்விகளுக்கு பதில் அளித்தார் பாட் கம்மின்ஸ்.

பெரும் வலி

பெரும் வலி

அப்போது அவரிடம் பந்துவீச மிகவும் கடினமான பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதிலில், "துரதிர்ஷ்டவசமாக நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், நான் வித்தியாசமான ஒருவரை குறிப்பிடப் போகிறேன். அவர் இந்தியாவின் புஜாரா. அவர் எங்கள் பின்னே பெரும் வலியை ஏற்படுத்தினார்" என குறிப்பிட்டார்.

பந்துவீச்சாளர்களை நம்பிய ஆஸி.

பந்துவீச்சாளர்களை நம்பிய ஆஸி.

அந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலவீனமாக இருந்தது. அதே சமயம் பந்துவீச்சு பலமாக இருந்தது. எனவே, பந்துவீச்சாளர்களை சார்ந்தே ஆஸ்திரேலிய அணி இயங்கியது. விராட் கோலி உட்பட மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை கூட சமாளித்து குறைந்த ரன்களில் வீழ்த்தினர்.

சிறந்த பந்துவீச்சு கூட்டணி

சிறந்த பந்துவீச்சு கூட்டணி

அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரைக் கொண்ட சிறந்த பந்துவீச்சு கூட்டணி அமைந்தது. ஆனால், புஜாரா நீண்ட நேரம் களத்தில் நின்று அவர்களை தொடர்ந்து பந்து வீச வைத்து சோர்வடைய வைத்தார்.

மன்கட் செய்வேன்

மன்கட் செய்வேன்

அதைத் தான் வலி என குறிப்பிட்டுள்ளார் பாட் கம்மின்ஸ். சில மாதங்கள் முன்பு ஹேசல்வுட் தான் அளித்த பேட்டியில், புஜாராவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தாவது வீழ்த்த அடுத்த முறை முயல்வேன் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 26, 2020, 14:11 [IST]
Other articles published on Apr 26, 2020
English summary
Pat Cummins still not able to forget Pujara’s painful batting from 2018-19 test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X