சூப்பர் மேன் ரோஹித்...ஸ்பைடர் மேன் சான்ட்னர்... அயர்ன் மேன் கோஹ்லி... அப்ப டோணி?

Posted By:

திருவனந்தபுரம்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி பல சிக்கல்களுக்கு இடையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்து இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி மிகவும் அதிரடியாக விளையாடி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 8 ஓவர்கள் மட்டுமே விளையாடி இருந்தாலும் இந்த வருடத்தில் நடந்த பெஸ்ட் டி-20 போட்டி இது என்று கூட சொல்லலாம்.

மிகவும் சிறப்பாக நடத்த இந்த போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் சூப்பர் ஹீரோக்களாக மாறிய தருணங்கள் எல்லாம் வைரல் ஆகி இருக்கிறது. நியூசிலாந்தை சிறப்பாக வீட்டுக்கு அனுப்பிய கோஹ்லிக்கு அயர்ன் மேன் என ரசிகர்கள் பெயர் வைத்து இருக்கின்றனர்.

 திருவனந்தபுரத்தில் டி-20 போட்டி

திருவனந்தபுரத்தில் டி-20 போட்டி

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று இரவு நடந்தது. மழை காரணமாக தடைபட்ட இந்த போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் இந்தியா பேட் செய்து 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 67 ரன்கள் எடுத்தது. 68 என்ற இலக்கை விரட்டிச் சென்ற நியூசிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பும்ரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரிக்கெட்டின் சூப்பர் மேன் ரோஹித்

இந்த போட்டியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா ஒரு கேட்ச் பிடித்தார். பும்ரா போட்ட ஓவரில் கோலின் மூன்றோ பந்தை சிக்சை நோக்கி பறக்கவிட முயற்சித்தார். ஆனால் கிரிப்டான் கிரகத்தில் இருந்து வந்து சூப்பர் மேன் போல எங்கிருந்தோ ரோஹித் சர்மா ஓடி வந்து தாண்டி கீழே விழுந்து பந்தை பிடித்தார். மொத்த மைதானமும் அந்த கேட்சை பார்த்து வாய் பிளந்து நின்றது.

நியூசிலாந்தின் ஸ்பைடர் மேன் சான்ட்னர்

நியூசிலாந்து வீரர் மிட்சல் சான்ட்னர் இந்த போட்டியில் தன்னை ஒரு சர்க்கஸ்காரர் என்பதை நிரூபித்தார். இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டு இருந்த போது அபூர்வமாக ஒரே ஒரு பந்து ஃபோர் லைன் நோக்கி சென்றது. ஆனால் ஸ்பைடர் மேன் போல உடலை வளைத்து தாவி அந்த பந்தை தடுத்தார் மிட்சல் சாந்தர். மேலும் உடனடியாக அதை கோஹ்லினிடம் கண் இமைக்கும் நொடியில் ததூக்கி எறிந்தார்.

வாட் ஏ மேன் டோணி

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய இருந்த போது பாண்டியா கொடுத்த பந்தை எளிதாக பிடித்த டோணி 'டாம் புரூஸை' ரன் அவுட் செய்தார். மைக்ரோ செக்கண்டில் பந்தை வாங்கி வேகமாக அடித்ததை லெக் அம்பயரால் கூட பார்க்க முடியவில்லை. ''டோணிக்கு வயசாகிடுச்சு அவர் டீமை விட்டு போகணும் என்று வந்த விமர்சனம் அனைத்திற்கும் அவர் இந்த விக்கெட் மூலம் பதிலளித்து இருக்கிறார்'' என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் குங்பூ பாண்டியா

இதேபோட்டியில் நேற்று இன்னொரு வைரல் ரன் அவுட்டும் விழுந்தது. நியூசிலாந்து 28 ரன்கள் எடுத்து இருந்த போது வில்லியம்சனை ரன் அவுட் செய்தார் பாண்டியா. கையில் பந்து வந்ததும் தெரியாமல், அடித்ததும் தெரியாமல் ஒரு நொடியில் விக்கெட் எடுத்தார் பாண்டியா. இரு ரன்அவுட்டுகளுக்கு பாண்ட்யா காரணமாக இருந்தார். அவர் பந்தை த்ரோ செய்யும் வேகம் மின்னலை போல இருந்தது. குறியும் தப்பாமல் இருந்தது.

Story first published: Wednesday, November 8, 2017, 11:44 [IST]
Other articles published on Nov 8, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற