For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது டெஸ்ட் போட்டி... அணி அறிவிச்சுருக்காங்க... சுப்மன் கில், சிராஜ் இடம்பிடிப்பு

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை மெல்போர்னில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.

விராட் கோலி குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பிய நிலையில், இந்த போட்டியில் அஜிங்க்யா ரஹானே கேப்டனாக பொறுப்பேற்கவுள்ளார்.

உங்க நேரம் முடிந்தது.. தீவிர பயிற்சிக்கு இடையே வந்த ஷாக் செய்தி..இளம் வீரரை அதிரடியாக நீக்கிய ரஹானே உங்க நேரம் முடிந்தது.. தீவிர பயிற்சிக்கு இடையே வந்த ஷாக் செய்தி..இளம் வீரரை அதிரடியாக நீக்கிய ரஹானே

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

மெல்போர்னில் 2வது டெஸ்ட்

மெல்போர்னில் 2வது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை மெல்போர்னில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. முதலில் இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இடம்பெறாத வீரர்கள்

இடம்பெறாத வீரர்கள்

நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வார்னர் உள்ளிட்ட சில வீரர்கள் இடம்பெறவில்லை. இதேபோன்று இந்திய அணியிலும் கேப்டன் விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை.

கில், சிராஜ் இடம்பிடிப்பு

கில், சிராஜ் இடம்பிடிப்பு

துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையில் நடைபெறவுள்ள நாளைய போட்டியில் துவக்க வீரர் பிரித்வி ஷா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கவுள்ளார். இதேபோல பௌலர் முகமது சிராஜ் நாளைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சவால்

ஆஸ்திரேலியாவின் சவால்

இந்த போட்டியில் மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விஹாரி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக பந்த் செயல்பட உள்ளார். மொத்தத்தில் முக்கிய வீரர்கள் இல்லாத இந்த அணிக்கு ஆஸ்திரேலிய அணி சவால் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Story first published: Friday, December 25, 2020, 13:39 [IST]
Other articles published on Dec 25, 2020
English summary
Vihari got another opportunity, Hope he makes the most of it -experts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X