"ஓய்வை அறிவித்ததும் அனைவரும் உணர்ச்சிவசப் பட்டனர்".. மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கு மோடி பாராட்டு

டெல்லி: மனதின் குரல் எனப்படும் மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் ரேடியோவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் போது நாட்டில் நாட்டில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள், தனிப்பட்ட மனிதர்களின் சேவைகளை பிரதமர் மோடி பாராட்டி பேசுவார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் குறித்து பேசினார்.

நண்பர்களே, இன்று விளையாட்டு குறித்து பேசும் போது நான் இந்தியாவின் திறமைவாய்ந்த தலைசிறந்த வீராங்கனை மித்தாலி ராஜ் குறித்து பேச விரும்புகிறேன். மித்தாலி ராஜ் இம்மாத தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த முடிவை கேட்டதும், பலரும் உணர்ச்சிவரப்பட்டனர்.

அயர்லாந்து தொடருக்கு இப்படி தான் அணி வேண்டும்.. இன்றைய பிளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்அயர்லாந்து தொடருக்கு இப்படி தான் அணி வேண்டும்.. இன்றைய பிளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்

மித்தாலி ராஜ் ஒரு தனித்துவமான சிறந்த வீராங்கனையாக மட்டும் விளங்கவில்லை. நிறைய வீராங்கனைகளுக்கும், மக்களுக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்துள்ளார். மித்தாலி ராஜின் எதிர்காலம் சிறந்து அமைய நான் வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட், சிறு வயதில் சதம், இரட்டை சதம் என பல்வேறு சாதனைகளை மித்தாலி ராஜ் படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 64 முறை அரைசதம் விளாசி சாதனையும் படைத்துள்ளார். மித்தாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தானாக இருந்தாலும், அவர் ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Prime minister Narendra modi maanki baat speech about Mithali raj"ஓய்வை அறிவித்ததும் அனைவரும் உணர்ச்சிவசப் பட்டனர்".. மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கு மோடி பாராட்டு
Story first published: Sunday, June 26, 2022, 20:28 [IST]
Other articles published on Jun 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X