For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களால கோஹ்லி, ரோஹித் போல ஒரு வீரரைக் கூட உருவாக்க முடியாது.. வக்கார் யூனிஸ்

சிட்னி: இந்தியாவின் ஐபிஎல் போல எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. கண்டிப்பாக எங்களது லீக் மூலம் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா போல ஒரு வீரரை உருவாக்க முடியாது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ்.

ஐபிஎல் போட்டிகளிலிருந்து சிறந்த வீரர்கள் உருவாவது போல பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலிருந்து யாரையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் வக்கார் யூனிஸ் பாகிஸ்தானியர்களைக் கேட்டுக் கொKண்டுள்ளஆர்.

சிட்னியில் அவர் அளித்த ஒரு பேட்டியின்போது இப்படி இந்திய சூப்பர் லீக்கையும், இந்திய வீரர்களையும் புகழ்ந்து பேசினார் யூனிஸ். அவரது பேட்டியிலிருந்து...

எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கக் கூடாது

எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கக் கூடாது

பாகிஸ்தான் சூப்பர் லீக் குறித்து முதல் ஆண்டிலேயே அதிக எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. 3 அல்லது நான்கு ஆண்டுகளாவது ஆக வேண்டும். அப்போதுதான் ரிசல்ட் கிடைக்க ஆரம்பிக்கும்.

கோஹ்லியும், ரோரஹித்தும்

கோஹ்லியும், ரோரஹித்தும்

உடனடியாக நாம் கோஹ்லி போன்ற வீரர்களையோ அல்லது ரோஹித் சர்மா போன்றவர்களையோ எதிர்பார்க்க முடியாது. அது நடக்கவும் வாய்ப்பில்லை.

இளம் வீரர்களுக்கு உதவும்

இளம் வீரர்களுக்கு உதவும்

பாகிஸ்தான் சூப்பர் லீக் நிச்சயம் இளம் பாகிஸ்தான் வீரர்களுக்கு உதவும். எப்படி ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு பல நல்ல வீரர்கள் கிடைத்தனரோ, அதேபோல போல பாகிஸ்தான் அணிக்கும் பல நல்ல வீரர்கள் கிடைக்க இந்த லீக் உதவும்.

பொறுமை அவசியம்

பொறுமை அவசியம்

அதேசமயம், நமக்கு பொறுமை அவசியம். சர்வதேச அளவிலான அனுபவம் நமது இளம் வீரர்களுக்குப் பழக வேண்டுிம். அதன் பிறகுதான் நம்மால் நமது இளம் திறமைகளை உரிய முறையில் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.

Story first published: Monday, February 15, 2016, 15:45 [IST]
Other articles published on Feb 15, 2016
English summary
PSL has to go a long way and we cannot produce any player like Kohli and Rohit immediately, says Waqar Younis.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X