For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் எல்லாம் சும்மா பாஸ்.. பிஎஸ்எல் தரம் என்ன தெரியுமா? கொளுத்தி போட்ட முகமது ரிஸ்வான்!

கராச்சி: ஐபிஎல் தொடரை விடவும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் சிறந்தது என்று பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக ஐபிஎல், பிஎஸ்எல், பிக் பேஷ் லீக், இலங்கை பிரீமியர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாளும் தனித்தனியே லீக் போட்டிகளை நடத்தி வருகிறது.

இதனிடையே ஐபிஎல் அணிகளை வாங்கிய உரிமையாளர்கள் பலரும் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் கிரிக்கெட் அணிகளை வாங்கி வருகின்றனர்.

2 அடுக்குகள் முழுவதும் புக்கிங்.. கேரள தீவில் நடக்கும் ஐபிஎல் ஏலம்..அணிகளுக்கு ஸ்பெஷல் மீட்டிங் ரெடி 2 அடுக்குகள் முழுவதும் புக்கிங்.. கேரள தீவில் நடக்கும் ஐபிஎல் ஏலம்..அணிகளுக்கு ஸ்பெஷல் மீட்டிங் ரெடி

ஐபிஎல் vs பிஎஸ்எல்

ஐபிஎல் vs பிஎஸ்எல்

அதுமட்டுமல்லாமல் ஏராளமான இளம் வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவதை விடவும், லீக் போட்டிகளில் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஒரு லீக் தொடருடன் மற்றொரு லீக் தொடரை ஒப்பிடும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருடன் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரை ஒப்பிட்டு பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் கூறியுள்ள கருத்து இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முகமது ரிஸ்வான் கருத்து

முகமது ரிஸ்வான் கருத்து

ஐபிஎல் தொடர் குறித்து முகமது ரிஸ்வான் கூறுகையில், சர்வதேச அளவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது கடினமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளயாடிய வீரர்களிடம், பிஎஸ்எல் தரம் குறித்து கேட்டு பாருங்கள். டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் கூட பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 ஐபிஎல் தரம்

ஐபிஎல் தரம்

என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரின் தரத்தை, பிஎஸ்எல் தொடர் எப்போதோ கடந்து சென்றுவிட்டது. பிஎஸ்எல் தொடர் தொடக்கத்தில் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தானால் இப்படி ஒரு தொடரை நடத்த முடியாது என்ற பேச்சு இருந்தது. ஆனால் கடந்த சீசனில் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் ரூ.38 கோடி லாபம் ஈட்டியுள்ளனர் என்று தெரிவித்தார்.

 பிஎஸ்எல் தொடர்

பிஎஸ்எல் தொடர்

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் 8வது சீசன் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது. சுமார் 40 நாட்கள் நடக்கவுள்ள போட்டிகளுக்காக, பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போதிருந்தே எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர். இதனிடையே பிஎஸ்எல் தொடரோடு, ஐபிஎல் தொடரை ஒப்பிட்டு முகமது ரிஸ்வான் பேசிய கருத்துக்கு, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Story first published: Sunday, December 18, 2022, 17:29 [IST]
Other articles published on Dec 18, 2022
English summary
Pakistan wicket keeper Mohammad Rizwan has said that Pakistan Premier League is better than IPL series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X