For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கையில் கிடைத்த கேட்சை கோட்டைவிட்ட பாக். வீரர்... கண்ணாடி போடச்சொன்ன ஸ்டார் டிவி!

By Veera Kumar

அடிலெய்டு: அல்வா போல கையில் சென்று விழுந்த பந்தை பிடிக்க தவறிய பாகிஸ்தான் ஃபீல்டரை கிண்டல் செய்வது போல ஒரு விளம்பரத்தை டைமிங்கில் வெளியிட்டு கலகலப்பை உண்டாக்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் அனல் வேகத்தில் பந்துகளை வீசிக் கொண்டிருந்தார். அதிலும், வாட்சனை ஸ்லெட்ஜ் செய்தவாரே, கடுப்பேற்றி பவுன்சர்களாக வீசினார்.

பல பந்துகளை அப்படியே கீப்பரிடம் பவிட்டுக் கொண்டிருந்தார் வாட்சன். பொறுத்தது போதும் என்று ஒரு பவுன்சரை வாட்சன் அடிக்கப்போக, அது பேட்டின் விளிம்பில் பட்டு பவுண்டரி எல்லையில் நின்ற ரகத் அலியை நோக்கி பயணித்தது.

Rahat Ali dropped a simple catch

இதை பார்த்த வகப் ரியாசுக்கு ஏக சந்தோஷம். ஸ்லெட்ஜிங்கிற்கு பலன் கிடைத்துவிட்டது என்று நினைத்தபடி, கேட்ச்... என்று சத்தம்போட்டார். அந்த பந்தும், ரகத் அலிக்காகவே பிறந்ததை போல, அவரது கைகளில் அல்வா போல இறங்கியது. ஆனால், சிம்பிளாக கிடைத்த அந்த வாய்ப்பை கோட்டை விட்டார் ரகத் அலி. பந்து கைகளில் இருந்து கீழே விழுந்தது.

பாகிஸ்தான் ரசிகர்கள் அத்தனைபேருக்கும், அந்த ஒரு நிமிடம் ரகத் அலி வில்லனை போல தென்பட்டார். அவர்களின் கோப பார்வையில் ரகத் அலி பட்டிருந்தால் எரிந்தே போயிருப்பார். அப்படி ஒரு ஆக்ரோஷம் ரசிகர்களிடம்.

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் அந்த காட்சியை திரும்ப ரிப்ளே செய்தது. அப்போதுதான், ரிப்ளே வீடியோவுக்கு கீழே, ஓடிய விளம்பரம் அனைவரையும் கவர்ந்தது. அது கண்ணாடிக்கான விளம்பரம். "கண் நன்கு தெரிய வேண்டுமா, இந்த கண்ணாடியை அணியுங்கள்" என்று ஒரு முன்னணி கண்ணாடி பற்றிய விளம்பரம்தான் அப்போது காண்பிக்கப்பட்டது. வாட் ஏ டைமிங் என அதை பார்த்த ரசிகர்கள் வாயில் இருந்து வார்த்தை தானாக வந்தது.

Story first published: Friday, March 20, 2015, 15:07 [IST]
Other articles published on Mar 20, 2015
English summary
Dug in short, Watson has enough of ducking and he pulls this one, the ball takes the top edge and goes straight to Rahat Ali at fine leg who settles under it but lo and behold, the ball pops put much to the disbelief of Wahab and Pakistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X