For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 ஆண்டுகளாக திட்டம் போட்ட டிராவிட்.. நேற்று தான் கைக் கூடியது.. இனி வரப்போவது டிராவிட் காலம்

மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், கடந்த 6 வருடங்களாக திட்டம் போட்டு காய் நகர்த்தியதற்கு நேற்று தான் பலன் கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு தான் நியமிக்கப்பட்டார். ஆனால், அதற்கு முன் அவர் ஜூனியர் அணிகளுக்கே பயிற்சியாளராக இருந்தார்.

3 விசயங்களில் சொதப்பிய ரிஷப் பண்ட்.. தோல்விக்கு காரணமாக அமைந்தன.. தப்பிக்குமா இந்திய அணி3 விசயங்களில் சொதப்பிய ரிஷப் பண்ட்.. தோல்விக்கு காரணமாக அமைந்தன.. தப்பிக்குமா இந்திய அணி

2016-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தார்.

ஏன் ஜூனியர் அணி?

ஏன் ஜூனியர் அணி?

அப்போதே பலரும், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் நினைத்தால் சீனியர் அணிக்கே பயிற்சியாளராக முடியுமே.. ஆனால் டிராவிட் ஏன் ஜூனியர் அணியை தேர்ந்து எடுத்தார் என்று பலரும் யோசித்தனர். அதற்கு பின்னால் இருந்த ராஜ தந்திரம் இப்போது புரிந்திருக்கும். பயிற்சியாளர் என்றால் சும்மாக உட்கார்ந்து இருப்பது டிராவிட்க்கு பிடிக்காது.

கும்ப்ளேவுக்கு கிடைத்த மரியாதை

கும்ப்ளேவுக்கு கிடைத்த மரியாதை

முடிவு எடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்று டிராவிட் நினைத்தார். 2015, 2016ஆம் ஆண்டில் எல்லாம் இந்திய கிரிக்கெட் அணி தோனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தோனியிடம் அது செய், இதை செய் என்று கட்டளையிட முடியாது. இதே போன்று விராட் கோலியும் சீனியர் தான். பயிற்சி செய்யுங்கள் என்று கூறிய கும்ப்ளேவையே துரத்திவிட்டார் கோலி. இதனால், அப்போது பயிற்சியாளராக சென்றால் மரியாதை இருக்காது என்று நினைத்தார் டிராவிட்.

தயாரான இளம் வீரர்கள்

தயாரான இளம் வீரர்கள்

அதுவும் ஒரு பயிற்சியாளராக செயல்படுவதுக்கு ஐபிஎல் அனுபவம் மட்டும் போதாது என்று நினைத்த டிராவிட், இந்திய ஏ அணி, இந்தய அண்டர் 19 போன்ற வழியை தேர்ந்து எடுத்தார். அதில் ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல், ஒரு அணிக்கு பயிற்சியாளராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அனுபவமும் டிராவிட்க்கு கிடைத்தது. அதே போன்று அப்போதைய இளம் வீரர்களுக்கு ஒரு குரு போன்ற தோற்றத்தை ராகுல் டிராவிட் நிறுவி விட்டார்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Rahul Dravid About Umran Malik | IND vs SA *CricketWrap
டிராவிட் மாணவர்கள்

டிராவிட் மாணவர்கள்

இப்போது காலம் செல்ல, செல்ல ராகுல் டிராவிட் பட்டறையில் பயிற்சி செய்த 90 சதவீதம் வீரர்களும் இப்போது சீனியர் அணிக்கு வந்துவிட்டனர். ராகுல் டிராவிட்க்கு கீழ் பயிற்சி செய்த ரிஷப் பண்ட் அடுத்த கேப்டன் என்ற நிலை வந்துவிட்டது. இப்போதைய அணிக்கு பயிற்சியாளராக வரும் டிராவிட்க்கு , தன்னுடைய மாணவர்கள் ராஜ மரியாதை தருவார்கள். டிராவிட் கோடு போட்டால் அவர்கள் ரோடு போடுவார்கள். இதை விரும்பி தான் ராகுல் டிராவிட், அப்போது ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.

டிராவிட் திட்டம் வெற்றி

டிராவிட் திட்டம் வெற்றி

இன்னும் 5, 6 வருடத்திற்கு டிராவிட் சொல்வது தான் சட்டம். டிராவிட் நினைக்கும் படி தான் இந்திய அணி இருக்கும். டிராவிட் கிரிக்கெட் தொழில்நுட்பத்தில் பிதாமகன். அவருடைய உதவி தேவை என நினைத்து தான் ரோகித் இப்போது டிராவிட்க்கு முழு ஒத்துழைப்பை தருகிறார். இதே போன்று இந்திய அணியின் அடுத்த கேப்டனான ராகுல் (கர்நாடகா உறவு) , ரிஷப் பண்ட் எல்லாம் டிராவிட்டின் மாணவர்கள் தான். இதனால் டிராவிட் போட்ட திட்டம் நேற்று ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட உடன் நிறைவேறியது.

Story first published: Saturday, June 11, 2022, 0:22 [IST]
Other articles published on Jun 11, 2022
English summary
Rahul dravid 6 Year strategy and road map for team india is finally success6 ஆண்டுகளாக திட்டம் போட்ட டிராவிட்.. நேற்று தான் கைக் கூடியது.. இனி வருப்போவது டிராவிட் காலம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X