சுழற்பந்துவீசிய பயிற்சியாளர் டிராவிட்..!! வைரல் வீடியோ.!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான ராகுல் டிராவிட் எப்படி பட்ட பேட்ஸ்மேன் என்று நமக்கு தெரியும். ஆனால் அவருக்கு பந்துவீச தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

சுழற்பந்துவீசிய பயிற்சியாளர் டிராவிட்..!! வைரல் வீடியோ.!!

90களில் விளையாடிய அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குமே சுழற்பந்துவீச்சு கை வந்த கலை. சச்சின், சேவாக், தினேஷ் மோங்கியா என அனைவரும் சுழற்பந்துவீசுவார்கள்.

அவ்வளவு ஏன் ராகுல் டிராவிட்டே சர்வதேச ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தான் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்கள் டிராவிட் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் டிராவிட் வீரர்களுக்கு சுழற்பந்து வீசினார். பின்னர், பேட்டிங் செய்த டிராவிட், வீரர்களுக்கு சிலிப் கேட்ச் பயிற்சி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு பந்துவீசுவது தொடர்பாக சில நுணுக்கங்களையும், அறிவுரைகளையும் டிராவிட் வழங்கினார்.

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

பின்னர் சுழற்பந்துவீச்சுக்கான ஷாட் லேக் ஃபில்டிங் பயிற்சியையும் டிராவிட் வழங்கினார். ராகுல் டிராவிட் வீரர்களுக்கு இணையாக பயிற்சியை மேற்கொண்டதும், சுழற்பந்துவீசிய காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கேரி கிறிட்னுக்கு பிறகு பயிற்சியாளர் ஒருவர் இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் இருந்த பயிற்சியாளர் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ஓய்யரமாக நிற்பார் என்ற குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rahul dravid spin bowling in nets viral video. Dravid Grinded Indian Playes in a net session
Story first published: Wednesday, November 24, 2021, 20:16 [IST]
Other articles published on Nov 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X