4-4-0-10 ராஜஸ்தான் மாணவர் டி-20ல் அசத்தல்

Posted By: Staff

ஜெய்ப்பூர்: டி-20 போட்டி என்பதே பேட்ஸ்மேன்களுக்கான போட்டியாக மாறியுள்ள நிலையில், 4 ஓவர்களில் ஒரு ரன்கூட கொடுக்காமல், 10 விக்கெட்டை வீழ்த்தி, ராஜஸ்தானைச் சேர்ந்த 15 வயது மாணவர் சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டபோதும், தலா 8 ஓவர்கள் விளையாடினர். அந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்தாலும், இரண்டு அணிகளும் இணைந்து 11 விக்கெட்களை இழந்தது.

Rajasthan boy creates history in T-20

வெற்றி மட்டுமே இலக்காக வைத்து பேட்ஸ்மேன்கள் விளையாடுவதால், விக்கெட் விழுவது சகஜம்தான். அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்களையும் சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் ராஜஸ்தானில் நடந்த ஒரு டி-20 போட்டியில், 4 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல், 10 விக்கெட்களை வீழ்த்தி, 15 வயதாகும் ஆகாஷ் சவுத்ரி என்ற இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளர் சாதனைப் படைத்துள்ளார்.

ராஜஸ்தானில் லேட் பவேர் சிங் டி-20 போட்டி நடக்கிறது. இதில் திஷா கிரிக்கெட் அகாதெமி 156 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய பியர்ஸ் அகாதெமி, 7 ஓவர்களில் 32 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் திஷா கிரிக்கெட் அகாதெமியின் இடதுகை மிதவேகப் பந்து வீச்சாளரான ஆகாஷ் சவுத்ரி, 4 ஓவர்களில், ஒரு ரன் கூட கொடுக்காமல், 10 விக்கெட்டுகளையும் சுருட்டி எடுத்தார்.

டி-20 போட்டியில் ஒரு வீரர் 10 விக்கெட்டை வீழ்த்தியதில்லை. அதுவும் ரன் ஏதும் கொடுக்காமல். பள்ளி மாணவர் ஆகாஷ் சவுத்ரி அந்த சாதனையைப் புரிந்துள்ளார்.

Story first published: Friday, November 10, 2017, 13:46 [IST]
Other articles published on Nov 10, 2017
Please Wait while comments are loading...