For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆமா.. ஏன் புஜாரா சரியா விளையாடல.. அவருக்கு உடம்பு சரியில்லைங்க.. கவலையில் கேப்டன்!

ராஜ்காட் : நியூசிலாந்து தொடரை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய ஆல்-ரவுண்டர் சத்தீஸ்வர் புஜாரா நேரிடையாக ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.

சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிய புஜாரா, தீவிரமான காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்றினால் அவதியுற்றார். இதையடுத்து அவரால் முதல் நாளில் 24 பந்துகளில் மட்டுமே விளையாட முடிந்தது.

Ranji Trophy Final: Cheteshwar Pujara Retires Hurt With Throat Infection

இந்நிலையில் அவர் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும், இன்று அவர் தனது அணிக்காக களமிறங்கி விளையாடுவார் என்றும் சௌராஷ்டிரா அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்று சில சிறப்பான தருணங்களை தந்த இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் சத்தீஸ்வர் புஜாரா, அங்கிருந்து திரும்பிய நிலையில் தற்போது தனது சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். ராஜ்காட்டில் சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்று ஆடி வருகின்றன.

நேற்று துவங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிய சத்தீஸ்வர் புஜாரா 24 பந்துகளை மட்டுமே ஆடினார். தீவிர காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்றால் அவதியுற்ற அவர், இடையிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் தற்போது தேறியுள்ளதாகவும், இன்று அவர் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை தொடர்வார் என்றும் சௌராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனாத்கட் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக 4வது இடத்தில் விளையாடும் புஜாரா தன்னுடைய காய்ச்சல் காரணமாக 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடினார். 24 பந்துகளை அவர் எதிர்கொண்ட நிலையில் வெறும் ஒரு ரன் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது. இதையடுத்து பாதியிலேயே அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, 11வது வரிசையில் விளையாடும் சேத்தன் சகாரியா, புஜாராவிற்கு அடுத்ததாக விளையாடினார்.

முதல் நாளில் விளையாடிய சௌராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை அடித்திருந்தது. இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ள அந்த அணிக்கு, புஜாராவின் ரன் குவிப்பு அத்தியாவசியமாக உள்ளது. இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய ஆட்டத்தை தொடர்ந்து ரன்களை குவிப்பார் என்று அணி ஆர்வத்துடன் உள்ளது.

Story first published: Tuesday, March 10, 2020, 15:25 [IST]
Other articles published on Mar 10, 2020
English summary
Cheteshwar Pujara could not bat more than 24 balls due to fever
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X