For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையில் ரஞ்சி போட்டி : கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்

By Karthikeyan

நெல்லை: நெல்லையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமானது ரஞ்சிக் டிராபி கிரிக்கெட் போட்டி. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

ranji trophy match in nellai

பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, மும்பை, பரோடா, ரயில்வே, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆந்திரா குஜராத் அணிகளுக்கு இடையே வெவ்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 23ம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. 26ம் தேதி வரையிலும் நான்கு நாட்கள் நடக்கின்றன

இந்த போட்டியில் தமிழக அணியில் தினேஷ்கார்த்திக், அபினவ் முகுந்த், அபராஜித் ஆகிய வீரர்களும், குஜராத் அணியில் பார்த்தீவ் படேல், அக்சர் படேல், ஆர்.பி.சிங், ரமேஷ் பவார், வேணுகோபால், பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருநெல்வேலியில் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், போட்டிகள் மழையால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது நெல்லை பகுதி கிரிக்கெட் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் திருநெல்வேலி அசோசியேசன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்

Story first published: Saturday, November 21, 2015, 20:43 [IST]
Other articles published on Nov 21, 2015
English summary
Ranji Trophy returns to Tirunelveli after 10 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X