For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“புஷ்பா புருஷன்” தானே நீ.. கூகுள் செய்த கேலிக்கூத்து.. தோனி, கோலியை மறந்த இந்தியர்கள்!

டெல்லி : ஒரு தகவலை சரியா என தெரிந்து கொள்ள கூகுளை நாடுகிறோம். ஆனால், கூகுளே தவறான தகவலை பரப்பினால்..?!

2020இல் கூகுள் பரப்பிய ஒரு வதந்தியை இந்தியர்கள் பலர் உண்மை என நம்பி அதை பரப்பி விட அனைவரும் அந்த வதந்தி உண்மையா? என தேடத் துவங்கினர்.

அது வேறு ஒன்றும் இல்லை.. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மனைவி யார் என்பது தான். கூகுள் யாரை தெரியுமா அவரது மனைவியாக காட்டியது?

யார் அது?

யார் அது?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனினும், கூகுளில் அவரது மனைவி அனுஷ்கா சர்மா என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அனுஷ்கா சர்மா தான் அவரது கேர்ள்பிரண்டு எனவும் கூறப்பட்டு இருந்தது.

வதந்தி

வதந்தி

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த நிலையில், கூகுளே பரப்பிய இந்த வதந்தி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த வதந்திக்கு முக்கிய காரணம் கூகுள் ஒரு இணையதளத்தின் தகவலை அப்படியே பதிவிட்டு இருந்தது.

அதிகம் தேடிய மக்கள்

அதிகம் தேடிய மக்கள்

இந்த தகவல் சில ஊடகங்களில் வெளியான உடன் இது உண்மையா? என தெரிந்து கொள்ள பலரும் ரஷித் கான் மனைவி யார் என தேடத் துவங்கினர். கிட்டத்தட்ட நடிகர் சூரியின் காமெடி போல, "புஷ்பா புருஷன் தானே நீ" என்பது போல, ரஷித் கான் மனைவி யார் என தேடினர். இது பெரிய அளவில் வைரல் ஆனது. சில நாட்களுக்கு ரஷித் கான் டிரென்டிங்கில் இருந்தார்.

பட்டியலில் இடம்

பட்டியலில் இடம்

தற்போது 2020ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ரஷித் கான் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்கள் - ஜோ பிடன், அர்னாப் கோஸ்வாமி, கனிகா கபூர், கிம் ஜோங்உன், அமிதாப் பச்சன்.

விராட் கோலி, தோனி?

விராட் கோலி, தோனி?

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருமே இடம் பெறவில்லை. விராட் கோலி, தோனி போன்றோர் இதற்கு முந்தைய ஆண்டுகளில் எப்போதும் இந்தப் பட்டியலில் இடம் பெற்று வந்தனர். ஆனால், அவர்களை கூட இந்தியர்கள் அதிகம் தேடவில்லை.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

2019ஆம் ஆண்டில் இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இதே பட்டியலில் இடம் பிடித்து இருந்தார். அவர் இந்திய கிரிக்கெட் வீரர் என்பதால் அது பெரிய வியப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர்களை முந்தி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Wednesday, December 9, 2020, 23:06 [IST]
Other articles published on Dec 9, 2020
English summary
Rashid Khan appeared in most searched persons in Google in India 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X