வாவ் 19 வயதில் கேப்டன்.. டி-20 பவுலிங்கில் முதல் இடம்.. சாதனை மன்னனான ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான்

Posted By:
இளம் கேப்டன் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான்- வீடியோ

காபூல்: உலகில் மிகவும் இளவயது கேப்டன் என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் பெற்று இருக்கிறார். அதேபோல் இந்த வருடம் இவரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

ஏற்கனவே இவர் ஐசிசி விருது வாங்கினார். இளம் வயதில் ஐசிசி விருது வாங்கிய ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் இவர் மட்டுமே.

இவர் கோஹ்லிக்கு மிகவும் பிடித்தமான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்த இருக்கிறார்.

இணை வீரர்

கோஹ்லி எப்படி ஐசிசி சிறந்த வீரர் விருது வாங்கினாரோ அதேபோல் இவர் சிறந்த இணை வீரர் விருது வாங்கி உள்ளார். சென்ற வருடம் இவர் 60 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். 43 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் எடுத்து இருக்கிறார் இந்த ஆல் ரவுண்டர்.

மரண பவுலிங்

மரண பவுலிங்

சென்ற விக்கெட் எடுப்புகளின் படி கணக்கிட்டால் இவர் சராசரியாக போட்டிக்கு 3.8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 2017ம் வருடத்தில் இவருடைய சராசரியே மற்ற வீரர்களை விட அதிகம் ஆகும். சென்ற வருடம் இவர் இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இவருடைய சிறந்த பவுலிங்கான 7/18 என்பதும் சென்ற வருடம் தான் நடந்தது.

ஐபிஎல்

ஐபிஎல்

சென்ற வருடம் இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. ஒரு ஆப்கான் வீரர் இவ்வளவு விலைக்கு ஏலம் போனது அதுவே முதல்முறை ஆகும். தற்போது மீண்டும் இவரை ஹைதராபாத் அணி 9 கோடி கொடுத்து எடுத்துள்ளது. அனைத்து அணிகளும் இவருக்கு போட்டியிட்ட நிலையில் ஆர்டிஎம் மூலம் இவர் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

முதல்

முதல்

தற்போது இவர் சர்வதேச டி-20 பவுலிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்த வயதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் டி-20 பவுலிங் தரவரிசையில் முதல் இடத்தில் வருவது இதுவே முதல் முறையாகும்.

கேப்டன்

கேப்டன்

தற்போது இவர் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஆகி இருக்கிறார். முன்னாள் கேப்டனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவர் விலகி இருக்கிறார். அதேசமயம் இந்த ஆல்ரவுண்டர் உலகக் கோப்பை போட்டிக்காக இப்போதே கேப்டனாக தயார் செய்யப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, March 1, 2018, 13:10 [IST]
Other articles published on Mar 1, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற