For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தானாக வந்து வண்டியில் ஏறும் ரவி சாஸ்திரி.. ஆசிய கோப்பை வெற்றிக்கு பின் ஒரே புகழ்ச்சி

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஆசிய கோப்பையை வென்று சாதனை புரிந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றிக்கு பின் பேட்டி கொடுத்த ரவி சாஸ்திரி கேப்டன் ரோஹித் சர்மாவை புகழ்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலியின் நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார் ரவி சாஸ்திரி.

அவர் தற்காலிக கேப்டன் ரோஹித் சர்மாவை பற்றி பாராட்டு மழை பொழிந்து இருக்கிறார் என்பது புருவங்களை உயர்த்தி உள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்லும் வரை ரவி சாஸ்திரி அதிகம் வெளியே வரவில்லை.

ரோஹித் பற்றி என்ன சொன்னார்?

ரோஹித் பற்றி என்ன சொன்னார்?

"ரோஹித் மிக அமைதியாக நடந்து கொள்பவர். அது அவரது தலைமையிலும் வெளிப்பட்டது. அவர் செய்த பந்துவீச்சு மாற்றங்கள் மிக நன்றாக இருந்தது. கடைசி 30 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே கொடுத்தது என்பது மிக புத்திசாலித்தனமானது" என பாராட்டி தள்ளி உள்ளார் ரவி சாஸ்திரி

பந்துவீச்சும், பீல்டிங்கும் அருமை

பந்துவீச்சும், பீல்டிங்கும் அருமை

"இந்திய அணியின் மிகப் பெரிய நன்மை பீல்டிங் தான். ஒவ்வொரு போட்டியிலும் 30-35 ரன்கள் வரை கட்டுப்படுத்தினார்கள். மத்திய ஓவர்களில் நாம் தொடர்ந்து விக்கெட் எடுத்தோம். இந்த கடினமான சூழ்நிலைகளில் புதிய பந்தில் நன்றாகவே பந்து வீசினோம். சுழல் பந்துவீச்சாளர்களும் இணைந்து செயல்பட்டார்கள்" என புகழ்ச்சி மழை பொழிந்துள்ளார் ரவி சாஸ்திரி.

மீண்டும் இங்கிலாந்து கதையா!?

மீண்டும் இங்கிலாந்து கதையா!?

ஆசிய கோப்பை வெற்றி பற்றி பேசி வந்த ரவி சாஸ்திரி சம்பந்தமே இல்லாமல் இங்கிலாந்து தொடர் பற்றி பேசினார். "அது வேற கிரிக்கெட் தான் (டெஸ்ட் கிரிக்கெட்). ஆனால், நாங்கள் அங்கே எப்படி விளையாடினோம் என எல்லோருக்கும் தெரியும். அது முடிவுகளில் தெரியவில்லை" என சப்பை கட்டு கட்டினார். எதற்கு ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகள் தொடரை, இங்கிலாந்து டெஸ்ட் தொடரோடு முடிச்சு போட்டு பேசினார் என்பதே புரியவில்லை.

திரும்ப திரும்ப பேசுறார்

திரும்ப திரும்ப பேசுறார்

ரவி சாஸ்திரி பேசிய பேச்சை பார்த்தால், அவர் ஏதோ கமண்டரி செய்பவர் போல தான் பேசி இருக்கிறார். இந்தியாவின் வெற்றிக்கு வீரர்கள் என்ன பயிற்சி செய்தார்கள், எப்படி உழைத்தார்கள், இன்னும் எங்கே தவறு செய்கிறோம் என எதையும் பேசாமல், ஒரு பார்வையாளர் போல தான் பேசி இருக்கிறார். அதே போல, திரும்ப திரும்ப இங்கிலாந்து தோல்வியை நியாயப்படுத்தி பேசுவதில் தான் குறியாக இருக்கிறார். இங்கிலாந்தில் விராட் கோலி கேப்டன், இங்கே ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா கேப்டன். இதை கூட ரவி சாஸ்திரி ஒப்பிட்டு பேசலாமே.. பேசுவாரா?

Story first published: Saturday, September 29, 2018, 13:38 [IST]
Other articles published on Sep 29, 2018
English summary
Ravi Shasthri shared his views about captain Rohit sharma after Asia cup victory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X