For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிக பயிற்சி போட்டிகள் கொடுத்தால் வெற்றி பெறுவோம்.. மாத்தி மாத்தி பேசும் ரவி சாஸ்திரி

மும்பை : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பு அதிக பயிற்சி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், அது சாத்தியமா? என பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.

ஏற்கனவே, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா தொடர்களில் அதிக பயிற்சி போட்டிகளில் ஆடாமல் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

அதற்கு, ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலி தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், இப்போது அப்படியே மாற்றிப் பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.

இதற்கு முன்

இதற்கு முன்

முதலில் இங்கிலாந்து தொடரின் போது பயிற்சி போட்டிகளை பற்றி ரவி சாஸ்திரி என்ன கூறினார், பிசிசிஐ என்ன கூறியது என்பதை பார்ப்போம். இங்கிலாந்து தொடரில் ஒரே ஒரு பயிற்சி போட்டி மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நான்கு நாள் போட்டியும், பிட்ச் சரியில்லை, மைதானம் சரியில்லை எனக் கூறி மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது. இது பற்றி அன்று பேசிய ரவி சாஸ்திரி, உண்மையை மறைத்து "நாங்கள் எந்த பிட்சிலும் ஆடுவோம். அதிக நேரமில்லாததால் ஒரே ஒரு பயிற்சி போட்டியில் பங்கு பெறுகிறோம்." என கூறினார்.

பிசிசிஐ என்ன சொன்னது?

பிசிசிஐ என்ன சொன்னது?

அடுத்து இந்திய அணி தோல்விகளை சந்தித்த போது, அதிக பயிற்சி போட்டிகளில் ஏன் இந்திய அணி ஆடவில்லை என்ற கேள்வி எழுந்தது. அப்போது பிசிசிஐ அதிகாரி ஒருவர், "ரவி சாஸ்திரி, கோலி என்ன கேட்டார்களோ அது எல்லாம் செய்து கொடுத்து விட்டோம். அவர்கள் குறைந்த பயிற்சி போட்டிகள் போதும் என்றார்கள். அதற்கேற்ப நாங்கள் அதை அளித்து விட்டோம்" என கூறினார். அதாவது, ரவி சாஸ்திரி சொல்லித்தான் குறைந்த பயிற்சிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர் அதை மறைத்துள்ளார்.

கோலி பேட்டி

கோலி பேட்டி

பின் ஒரு பேட்டியில் பேசிய கோலி, "பயிற்சி போட்டிகள் பெரிய அளவில் உதவாது. எதிரணி குறைந்த தரத்தில் தான் ஆடுகளம், மைதானம் இவற்றை வழங்குவார்கள் என பயிற்சி போட்டிகளில் தனக்கு நம்பிக்கையில்லை" என்பதை கூறினார்.

சாஸ்திரி சொல்வது என்ன?

சாஸ்திரி சொல்வது என்ன?

இப்போது ரவி சாஸ்திரி, "ஆஸ்திரலியா டெஸ்ட் தொடருக்கு முன் நாங்கள் 2 அல்லது 3 பயிற்சி போட்டிகளில் ஆட விரும்புகிறோம். ஆனால், நேரமே இல்லை. 10 நாட்கள் தான் டெஸ்ட் போட்டிகளுக்கு முன் இடைவெளி இருக்கிறது. இதெல்லாம், முன்பே திட்டமிடப்படும் விஷயம். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பயிற்சி போட்டிகள் இல்லாததால் தன் நாங்கள் முதல் அல்லது இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு பின் நன்றாக ஆடுகிறோம்" என கூறி இருக்கிறார். அதாவது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பயிற்சி போட்டிகள் இல்லாததால் எங்களால் சரியாக ஆட முடியவில்லை. டெஸ்ட் சூழ்நிலைக்கு மாற இரண்டு டெஸ்ட் போட்டிகள் தேவைப்படுகின்றன, என கூறி இருக்கிறார்.

மாற்றிப் பேசும் சாஸ்திரி

மாற்றிப் பேசும் சாஸ்திரி

கோலி, ரவி சாஸ்திரி இருவரும் ஒரே எண்ணத்தில் இருப்பவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர்கள் வெளியே பேசும் போது ஒருவர் சொன்னதற்கு மாறாக பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இப்போது டெஸ்ட் தொடரை தோற்ற நிலையில், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சி போட்டி பற்றிய கோலியின் எண்ணம் மற்றும் பிசிசிஐயிடம் இவர்கள் குறைவான பயிற்சி போட்டிகளை கேட்டது போன்ற தவகல்களை மறைத்து, அப்படியே மாற்றிப் பேசியுள்ளார்.

Story first published: Friday, September 14, 2018, 13:28 [IST]
Other articles published on Sep 14, 2018
English summary
Ravi shasthri want more pracrtice games before Australia test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X