
ரசிகர்களின் ஆசை
காரணம், உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசக்கூடியவர். பயிற்சியின் போது கூட 163 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி அசத்தினார். இதனால் உம்ரான் மாலிக்கை விரைவில் இந்திய அணியில் சேர்த்து உலகக் கோப்பை தொடருக்கு தயார் படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரவி சாஸ்த்ரி கருத்து
டி20 உலககோப்பை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் , உம்ரான் மாலிக் அணியில் இருப்பது அவசியம் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருதுகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். அதன் படி, உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க கூடாது என்று கூறியுள்ளார்.

வாய்ப்பு வழங்க கூடாது
உலகக் கோப்பை தொடரிலும் விளையாட வாய்ப்பு வழங்க கூடாது என்று அவர் கூறியுள்ளார். உம்ரான் மாலிக் தற்போது தான் அவர் வளர்ந்து வருகிறார். அவரை இந்திய அணியில் சேர்த்து சீனியர்களுடன் பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரக்கூடாது.

தயாராகவில்லை
முதலில், உம்ரான் மாலிக் 50 ஓவர் போட்டியில் விளையாட வைக்க வேண்டும். தேவைப் பட்டால் டெஸ்ட் போட்டிக்கு தயார் படுத்த வேண்டும். அவசரப்பட்டு இன்னும் 4 மாதத்தில் தொடங்க உள்ள டி20 உலக கோப்பையில் சேர்க்க கூடாது. உம்ரான் மாலிக்கை இன்னும் பட்டை தீட்ட வேண்டும். அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகவில்லை என்று ரவி சாஸ்த்ரி கூறி உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











