For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தப்பான முடிவு இது ரோகித்.. எச்சரிக்கை விடுத்த ரவி சாஸ்த்ரி.. சொதப்பிட வேண்டாம் என கோரிக்கை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.

Recommended Video

ICC T20 Rankings Suryakumar Yadav முன்னேற்றம்! சரிந்த Virat Kohli *Cricket

டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் நிலையில், இந்திய அணியில் பிளேயிங் லெவனை இறுதிப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.

ஆனால் அணியின் முக்கிய வீரர்கள் சிலர் தற்போது ஓய்வில் இருக்கிறார்கள். இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு இந்தியா சில சோதனை முயற்சிகளை செய்து வருகிறது.

ஒரே போட்டியில் 3 பெரும் சாதனைகள்.. ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா.. ரசிகர்கள் பாராட்டுஒரே போட்டியில் 3 பெரும் சாதனைகள்.. ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா.. ரசிகர்கள் பாராட்டு

மாறும் வீரர்கள்

மாறும் வீரர்கள்

குறிப்பாக தொடக்க வீரர் கேஎல் ராகுல் காயம் காரணமாக கடந்த சில தொடரில் விளையாடவில்லை. இதனையடுத்து, அந்த இடத்துக்கு இந்திய அணி ஒரு சில வீரர்களை களமிறக்கியது. முதலில் இணான் கிஷன் அந்த இடத்தில் விளையாடினார். பிறகு, இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார்.

புதிய பொறுப்பு

புதிய பொறுப்பு

இந்த நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக களமிறக்கியது. நடுவரிசையில் விளையதடிய வீரரை தொடக்க வீரராக களமிறங்கியதும், குழம்பிய அவர் முதல் 2 போட்டியையும் சேர்த்து 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். 3வது டி20 போட்டியில் அவர் அரைசதம் அடித்தாலும், இந்தியாவின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாடடியுள்ளனர்.

நடுவரிசை

நடுவரிசை

இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, சூர்யகுமார் நிச்சயம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நீடிப்பார். ஆனால் சூர்யகுமாரின் இடம் நடுவரிசை தான். அப்படி இருக்கும் போது அவரை தொடக்க வீரராக களமிறக்கியது சரி அல்ல. அவர் செம பார்மில் இருக்கிறார். தற்போது தொடக்க வீரராக இறக்கிட்டு, ராகுல் வந்தவுடன் சூர்யகுமாரை எப்படியும் நடுவரிசையில் தான் களமிறக்குவீர்கள்.

ரவி சாஸ்த்ரி கோரிக்கை

ரவி சாஸ்த்ரி கோரிக்கை

இதனால் ரோகித் எடுத்த முடிவு தவறு. தொடக்க வீரராக ரிஷப் பண்ட் போன்ற வீரரை களமிறக்கி மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். சூர்யகுமாருக்கு 5வது இடத்தில் கூட பேட்டிங் செய்ய அனுப்புங்கள். தொடக்க வீரராக மாற்றுவதன் மூலம், அது நிலையற்ற தன்மையை அவரது மனதில் உருவாக்கிவிடும் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 4, 2022, 1:03 [IST]
Other articles published on Aug 4, 2022
English summary
Ravi shastri stern warning to rohit about opening position தப்பான முடிவு இது ரோகித்.. எச்சரிக்கை விடுத்த ரவி சாஸ்த்ரி.. சொதப்பிட வேண்டாம் என கோரிக்கை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X