பஞ்சாப் அணிக்கு அஸ்வின்தான் கேப்டன்.. உண்மையாகவே ஆளப்போறான் தமிழன்!

Posted By:
ஆளப்போறான் தமிழன்...பஞ்சாபி அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்...வீடியோ

சென்னை: ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது.

இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக இருந்தவர் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்கனவே சென்னை ரசிகர்களை அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

எவ்வளவு பணம்

எவ்வளவு பணம்

அஸ்வின் மொத்தம் 7.60 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணி இவரை வாங்க தவறிவிட்டது. இதற்கு காரணம் எல்லாம் தெரிவிக்கப்படவில்லை. பஞ்சாப் அணி இவரை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு எடுத்துள்ளது.

யுவாராஜ் சிங்

யுவாராஜ் சிங்

யுவராஜ் சிங் இருக்கும் போது அஸ்வின் ஏன் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதற்கு அணி நிர்வாகி சேவாக் பதில் அளித்துள்ளார். அதில் ''எனக்கு யுவராஜ் நல்ல நண்பர். ஆனால் அதுவேறு விளையாட்டு வேறு. எங்களுக்கு அஸ்வின் மேல் நம்பிக்கை இருக்கிறது. அவர் அணியை வழிநடத்துவார்'' என்றுள்ளார்.

Story first published: Monday, February 26, 2018, 16:13 [IST]
Other articles published on Feb 26, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற