உங்களை மாதிரி சூதாட்டம் பண்ண தெரியாது.. தென்னாப்பிரிக்க வீரரை திட்டி தீர்த்த அஸ்வின்

Posted By:
தென் ஆப்ரிக்க வீரருடன் சண்டை போட்ட அஸ்வின்- வீடியோ

சென்னை: முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்மான் கிப்ஸிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் சண்டை போட்டு இருக்கிறார். டிவிட்டரில் இவர்கள் போட்ட சண்டை மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

அஸ்வின் செய்த டிவிட்டுக்கு காமெடியாக பதில் அளிக்கிறேன் என்று கிப்ஸ் வாங்கி கட்டிக் கொண்டுள்ளார். அஸ்வின் முதல்முறை டிவிட்டரில் மிகவும் உக்கிரமாக பதில் அளித்துள்ளார்.

இருநாட்டு ரசிகர்களும் மாற்றி மாற்றி சமாதானப்படுத்தி பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அஸ்வின் தனது ட்வீட்களை டெலிட் செய்து இருக்கிறார்.

அஸ்வின் டிவிட்

அஸ்வின் புதிதாக வெளியாகி இருக்கும் 'நைஹி ஸ்போர்ட்ஸ் ஷு' குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதன் எடை மிகவும் குறைவாக இருக்கிறது. கீழே தேன் கூடு வடிவில் சிறிய காற்றுப்பைகள் இருக்கிறது. இதுவரை பார்த்ததில் சிறந்த ஷு இதுதான் என்றுள்ளார்.

வேகமா ஓடு

இங்குதான் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்மான் கிப்ஸ் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் ''நீங்க இனிமே வேகமா ஓடுவீங்கன்னு நம்புறேன்'' என்று கிண்டலா குறிப்பிட்டுள்ளார்.

பதில்

பதில்

இதற்கு அஸ்வின் கோபமாக ''கண்டிப்பாக உங்களை விட வேகமாக ஓட முடியாது. உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் சூதாட்டம் செய்யாமல் விளையாட வேண்டும். அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது. அந்த மனசு எனக்கு இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 2000ம் ஆண்டு கிப்ஸ் சூதாட்ட புகாரில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோக்கு

அதற்கு கிப்ஸ் ''நான் செய்த ஜோக்கை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்'' என்று பதில் அளித்து சமாதானப்படுத்தி இருக்கிறார்.

மீண்டும் அஸ்வின்

இதனால் அஸ்வின் முந்தையை டிவிட்டை டெலிட் செய்தார். அதோடு ''நானும் காமெடியாகத்தான் சொன்னேன். நீங்கள் தான் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். நாம் இதை ஒருநாள் ஒன்றாக சாப்பிடும் போது பேசி தீர்த்துக் கொள்ளலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, February 20, 2018, 10:59 [IST]
Other articles published on Feb 20, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற