For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்துவீச்சை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள ஆர்சிபி - இந்த சீசனாவது எடுபடுமா?

சென்னை: ஐபிஎல் 2021 சீசனில் பெங்களூரு தனது அணியின் பந்துவீச்சை ஓரளவுக்கு பலப்படுத்தியுள்ளது எனலாம்.

ஐபிஎல் தொடர்களில் பிரம்மாண்டமாக களமிறங்கி புஸ்ஸாகிப் போவது ஆர்சிபி அணியின் வாடிக்கை. மலை மலையாய் ரன்களை அடித்து குவித்துவிட்டு, அந்த ரன்களை எதிரணிகளை சேஸ் செய்ய வைப்பது இவர்களின் கை வந்த கலை.

கடந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெய்னும் 'முடியல சாமி.. முதுகு வலிக்குது' மோடில் பின்வாங்க, ஒட்டுமொத்தமாக அவர்களது பவுலிங் லைன் அடி வாங்கியது. 2020 சீசனில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியும், அவர்களது மோசமான பந்துவீச்சு காரணமாக வெளியேறியது. தற்போது அந்த குறையை ஆர்சிபி ஓரளவு சரி செய்துள்ளது என்று நம்புவோம்.

அறிமுகம்

அறிமுகம்

இதில் மிகப்பெரிய ஆக்ஷனாக, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனை 15 கோடி கொடுத்து வாங்கியுள்ளது ஆர்சிபி. நன்றாக நினைவுள்ளது. 2020ல் வெலிங்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் அறிமுகமானார் கைல்.

 ஆட்டம் காண வைத்த பவுலர்

ஆட்டம் காண வைத்த பவுலர்

அவரது பவுலிங்கில் பெரிய வேகம் இல்லை. கிட்டத்தட்ட 130 கி.மீ வேகத்தில் தான் வீசினார். ஆனால் அவரது உயரம் பெரிய பிளஸ். அவர் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசும் அந்த லைன், அனைத்திற்கும் மேலாக அவர் பந்தை பிட்ச் செய்யும் இடத்திலிருந்து அவருக்கு கிடைக்கும் பவுன்ஸ் ஆகியவை அவரை ஒரு தனித்துவ பவுலராக காட்டியது. அதே போட்டியில் கோலி, புஜாராவை முதல் செஷனிலேயே காலி செய்தவர் ஜேமிசன். இப்படி திறமை வாய்ந்த ஒரு பவுலரை பெங்களூரு எடுத்திருப்பது பெரிய பிளஸ்.

 ஓகே ரகம்

ஓகே ரகம்

அதேபோல் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மாய்சஸ் ஹென்ரிக்ஸை ஒரு கோடிக்கு வாங்கியுள்ளது ஆர்சிபி. டி20-ஐ பொறுத்தவரை ஹென்ரிக்ஸ் ஓகே ரகம் தான். ரொம்பவும் ரன்களை லீக் செய்துவிட மாட்டார். அதேசமயம், மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் இவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

 எதிரணிக்கு நெருக்கடி

எதிரணிக்கு நெருக்கடி

எனினும், ஓரளவுக்கு இப்போது தனது பவுலிங் யூனிட்டை பலப்படுத்திவிட்டது ஆர்சிபி. கைல் ஜேமிசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஹென்ரிக்ஸ், ஆடம் ஜம்பா, யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் என்று எதிரணிக்கு சவால் அளிக்கும் பந்துவீச்சு அமைப்பை உருவாக்கியுள்ளது. பேட்டிங்கில் சொதப்பாமல், வரும் சீசனில் சிறப்பாக ஸ்கோர் செய்தால், ஆர்சிபி தனது பந்துவீச்சு மூலம் நிச்சயம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Thursday, February 18, 2021, 23:16 [IST]
Other articles published on Feb 18, 2021
English summary
RCB strengthened it's bowling unit ipl auction 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X