For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மாற்றம்.. புதிய தேதிகள், போட்டி எண்ணிக்கைகள்.. பிசிசிஐ முடிவு!

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பிசிசிஐ மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்துடனான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஆனால் அந்த நாட்டில் தற்போது ஓமிக்ரான் எனும் புதுவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டிகள் நடைபெறுமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு நேர்ந்த சோகம்..!! கண்ணீருடன் வெளியேற்றம்..!! நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு நேர்ந்த சோகம்..!! கண்ணீருடன் வெளியேற்றம்..!!

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு வரும் டிசம்பர் 9ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.அங்கு வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் விளையாடவிருந்தது. இதற்காக ஓய்வில் இருந்த வீரர்களும் அழைக்கப்படவிருந்தனர். ஆனால் ஓமிக்ரான் குறித்த முடிவு எடுக்க வேண்டும் என்பதால் சுற்றுப்பயணம் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் வீரர்கள் தேர்வையும் பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.

தேதிகள் மாற்றம்

தேதிகள் மாற்றம்

தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரானின் தாக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து பிசிசிஐ சார்பில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 16ம் தேதி நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி முதல் தான் போட்டிகள் தொடங்கவுள்ளது.

போட்டி எண்ணிக்கை

போட்டி எண்ணிக்கை

இதன் மூலம் தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 போட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. இதனால் வீரர்களுக்கு பயிற்சி எடுக்க கால அவகாசமும், போட்டி தொடரை விரைவாக முடிக்கவும் முடியும்.

Recommended Video

Indian Team Selectors சிக்கல்! SA Tourல் யாருக்கு Chance? | OneIndia Tamil
வீரர்கள் மறுப்பு

வீரர்கள் மறுப்பு

இது ஒருபுறம் இருக்க தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி செல்லுமா என்பதிலேயே பிரச்னை நிலவி வருகிறது. திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் நடக்கும் என பிசிசிஐ கூறினாலும், அங்கு செல்ல இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அணிக்குள்ளேயே கார சார விவாதங்கள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story first published: Saturday, December 4, 2021, 14:08 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
Reports says India vs South Africa likely to start from December 26th with 2 Tests, 3 ODI and cut short few T20 matches as well.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X