உன்னோடு நான் இருந்தால்... என்னை நான் மிகவும் விரும்புகிறேன்... கவித... கவித...

புத்தாண்டையொட்டி பனிமலை ஒன்றில் தன்னுடைய காதலியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் அவருடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டுவந்த தன்னுடைய காதலி இஷா நேகியுடன் தான் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார்.

இன்டீரியர் டெகரேட்டர் மற்றும் தொழிலதிபராக உள்ள இஷா நேகியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை கடந்த ஆண்டு ஜனவரியிலும் ரிஷப் பந்த் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியிருந்தார்.

இனி டீம்ல சான்ஸ் கிடையாது.. அப்படியே கிளம்புங்க.. ட்ரிபுள் செஞ்சுரி அடித்த வீரருக்கு நேர்ந்த கதி!

சொதப்பும் இளம் வீரர்

சொதப்பும் இளம் வீரர்

முன்னாள் கேப்டன் எம்எஸ். தோனிக்கு மாற்றாக பார்க்கப்படும் ரிஷப் பந்த், விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?

ரிஷப் பந்த் தொடர்ந்து சொதப்பலான ஆட்டங்களை ஆடினாலும், அவர்மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பிசிசிஐ வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினருடனான சர்வதேச டி20 தொடரில் பந்த் விளையாட உள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

இன்டீரியர் டெகரேட்டர் மற்றும் தொழிலதிபராக உள்ள இஷா நேகி என்பவருடன் இணைத்து ரிஷப் பந்த் கிசுகிசுக்கப்பட்டு வரும்நிலையில் அவருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தான் ஈடுபட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கவிதை பேசிய ரிஷப் பந்த்

புத்தாண்டையொட்டி பனி படர்ந்த மலையில் தனது காதலியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த், கொண்டாட்டத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு, உன்னுடன் நான் இருக்கும் வேளையில் என்னையே நான் அதிகமாக விரும்புகிறேன் என்று வாசகத்தையும் சேர்த்துள்ளார்.

"சந்தோஷமாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன்"

இதேபோல கடந்த ஆண்டு ஜனவரியில் தன்னுடைய காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பந்த், தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தன்னுடைய காதலியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rishabh Pant celebrates New Year with his Girlfriend and shared a picture
Story first published: Friday, January 3, 2020, 14:06 [IST]
Other articles published on Jan 3, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X