For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அய்யோ, நெஞ்சு வாய்க்குள்ள வந்திருச்சி.. பிதாமகன் பொளந்துட்டாருங்க.. போதும் முடியல, ஆர்.ஜே.பாலாஜி

Recommended Video

WORLD CUP 2019 IND VS ENG | பிரபலமாகும் ஆர்.ஜே.பாலாஜியின் வர்ணனை

லண்டன்: கிரிக்கெட் பார்ப்பதே சந்தோஷமான விஷயம். அதிலும் நல்ல தமிழ் கமெண்டரியோடு லைவ் கிரிக்கெட் போட்டி பார்ப்பது மகா மகிழ்ச்சியான விஷயம். 1990ஸ்களில், சென்னையில் நடைபெறும், கிரிக்கெட் போட்டிகள், ஆல் இந்தியா ரேடியோவில் தமிழில் கமெண்டரி செய்யப்படும்.

சும்மா சொல்லக்கூடாது, காது வழியாகவே, மைதானத்தில் என்ன நடக்கிறது என்பதை கடத்திக் கொண்டு வர வேண்டிய நிலையிலும் அந்த வர்ணனையாளர்கள் தங்கள் பங்களிப்பை சூப்பராக செய்வார்கள். "பனை மரத்தில் இருந்து விழுந்தவனை பாம்பு கொத்தியதை போல, இந்த டீம் நிலைமை ஆகிவிட்டது" என்றெல்லாம் அவர்கள் அடித்த டைமிங் பஞ்ச்சுகளை அப்போதைய கிட்ஸ்கள் மறந்திருக்க முடியாது.

இதன்பிறகு ஸ்டார் டிவி போன்ற சாட்டிலைட், தொலைக்காட்சி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்த பிறகு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்தான் லைவ் போட்டிகளை பார்க்க முடிந்தது.

தமிழ் கமெண்டரி

தமிழ் கமெண்டரி

இப்போது அதே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல் தமிழ் கமெண்டரிக்காகவே தனியாக ஒரு சேனலை தொடங்கியுள்ளது. அந்த புண்ணியத்தால், இப்போது மீண்டும் காதாற தமிழ் பேச்சை கேட்க முடிகிறது. ஆனால், அதிலும் முதலில் சில தடுமாற்றங்கள் இருந்தன. ஹேமங் பதானியின் தமிழ் புரியவே செய்யாது. இலங்கை முன்னாள் வீரர் அர்னால்டு பேசுவது, தமிழா என்பதே புரியாது. இப்படியாக ரசிகர்கள் பொறுமையை ரொம்பவே சோதித்தனர்.

வர்ணனையாளர்கள்

வர்ணனையாளர்கள்

அதேநேரம், சில சூப்பர் வர்ணணையாளர்கள் இப்போ வந்துட்டாங்க என்பது தமிழர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியான செய்திதான். ஸ்ரீகாந்த், ரமேஷ், ஞானி, முத்து ஆகியோர் அருமையாக வர்ணனை செய்கிறார்கள். அவர்கள் பேசும்போது நிறைய புள்ளி விவரங்களையும் அப்படியே தூவி செல்கிறார்கள். ஸ்ரீகாந்த் வர்ணனை கொஞ்சம் துள்ளளாகவும் இருக்கும். ரமேஷ் கமெண்டரி, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஊமை குத்தாக இருக்கும். அதேநேரம், மற்றொரு வர்ணனையாளருக்கு தனி ரசிகர் மன்றமே ஆரம்பித்துள்ளார்கள்.

கலகலப்பு

கலகலப்பு

அந்த வர்ணனையாளர் வேறு யாருமல்ல, ஆர்.ஜே. பாலாஜி. ஆமாங்க, மனுஷன் கமெண்டரி அறைக்கு வந்தாலே, ரசிகர்களுக்கு இடுப்பில் கிச்சுக்கிச்சு மூட்டுவதை போல ஒரு உணர்வு. ஏற்கனவே ரேடியோ ஜாக்கி என்பதாலும், நடிகர் என்பதாலும், எளிதாக அவருக்கு டயலாக்குகள் ஃப்ளோவில் வந்து விழுகிறது. அத்தனையும் வெடி சிரிப்பு ரகமாக உள்ளது.

பிதாமகன் பெர்ஸ்டோ

பிதாமகன் பெர்ஸ்டோ

"பால யாருக்கும் தரமாட்டேன்னு ஓடுறாரு" என்று இவர் பும்ரா இரு கைகளுக்குள்ளும் பந்தை மூடிக்கொண்டே ஓடுவதற்கு ஒரு விளக்கம் கொடுத்தாரு பாருங்க. ப்பா. இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் பெர்ஸ்டோவுக்கு பாலாஜி வைத்துள்ள பெயர், பிதா மகன். நீங்களே வேணும்னா உற்று பாருங்க. பிதாமகன் விக்ரம் மாதிரியே பெர்ஸ்டோவ் முகம் இருக்கும்.

பந்துதான் அவரை அடிக்கிறது

பந்துதான் அவரை அடிக்கிறது

பெர்ஸ்ட்டோவ் எடுத்த ரன்ல நியாயமா 20 ரன்ன எச்சிதொட்டு அழிக்கனும். அதெல்லாம் எட்ஜ்ல பட்டு வந்தது, என்று சிரித்தபடி சொன்னார் பாலாஜி. பெர்ஸ்டோவ் பேட்டில் பந்து படவில்லை, பந்துகள்தான் அவர் பேட்டில் பட்டு ரன் வருகிறது என்று பாலாஜி அடித்த கமெண்ட் உண்மையிலேயே நிதர்சனமானதுதான். எவ்ளோ லக்குங்க அவருக்கு. அவரே ஸ்டெம்புல பேட்ட வச்சி அடிச்சாலும் பெயில்ஸ் விழாது. 300 அடிப்பாரு போல.. என்று பெர்ஸ்டோவ் பற்றி பாலாஜி சொன்னது ஓரளவுக்கு உண்மைதான். அவ்வளவு அதிருஷ்டம் அவருக்கு இன்று.

Story first published: Sunday, June 30, 2019, 19:21 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
RJ Balaji,back in the commentary box after a break in Star Sports Tamil....! Fans getting happy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X